அது இல்லனா அந்த படமே இல்ல!.. கமல் படம் பற்றி ஓப்பனாக பேசிய கே.எஸ்.ரவிக்குமார்!..

Published on: March 28, 2023
kamal
---Advertisement---

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குனர்களில் முக்கியமானவர். இவரது திரைப்படங்கள் அனைத்தும் காமெடி, காதல், சென்டிமென்ட், ஆக்சன் என கலந்துகட்டிய திரைப்படங்களாகவே இருக்கும் ரஜினி, கமல், விஜய், அஜித், சரத்குமார், சிம்பு, மாதவன், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களை வைத்தும் திரைப்படங்களை இயற்றியுள்ளார் .

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட இயக்குனர் ரவிக்குமார் பஞ்சதந்திரம் படத்தை பற்றி பேசியுள்ளார் இப்படத்தில் கமல், ஜெயராம், ரமேஷ், அரவிந்த், ஶ்ரீமான், யுகி சேது, சிம்ரன் மற்றும் ரம்யா கிருஷ்ணன், ஊர்வசி, தேவையானி , நாகேஷ் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர் .

ravkumar

ரவிக்குமார் கூறிய போது ‘இக்கதையில் ஹீரோவின் சோகத்தை மறக்க நண்பர்கள் ஒரு பாலியல் தொழிலாளியிடம் கூட்டி போவார்கள்.. இது செக்ஸை குறிக்கும் வல்கரான காட்சி. படத்தின் அடுத்தடுத்த காட்சிகளை அந்த காட்சியை வைத்துதான் நகரும். இத்திரைப்படம் பெயருக்கு ஏற்றார்போல் தந்திரமாக நகைச்சுவை உணர்வை தூண்டும் வகையில் இருந்ததால் ரசிகர்களிடம் ரீச் ஆகியது.

KS Ravikumar
KS Ravikumar

பஞ்சதந்திரம் இன்று வரை போரடிக்கும் படமாக இல்லாத நகைச்சுவை திரைப்படமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டது. இந்த படத்தில் கப்பலில் வைத்து சில படக் கட்சிகளை எடுக்க நினைத்தேன் ஆனால் முடியவில்லை. எனவே, அந்த ஆசையை மன்மதன் அம்பு என்னும் திரைபடத்தில் நிரைவேற்றி கொண்டேன்’ என ரவிக்குமார் கூறினார்.

இதையும் படிங்க: வாயிலயே வயலின் வாசிக்கிறாரு!.. விஜயகாந்தின் நிலையை கிண்டலடித்த நடிகை..

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.