
விஜய் தொலைக்காட்சி லொள்ளு சபாவில் தலை காட்டி கும்பலோடு கும்பலாக நின்று தனது நடிப்பு பயணத்தை துவங்கியவர் யோகிபாபு. அதன்பின் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் கோலமாவு கோகிலா திரைப்படம் மூலம் ரசிகர்களுக்கு நெருக்கமானார்.
சந்தானம் வேறு கதாநாயகனாக நடிக்கப்போய் விட யோகிபாபு காட்டில் மழைதான். பெரும்பாலான முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் திரைப்படங்களில் அவர்தான் காமெடி நடிகர். தர்பார் படத்தில் ரஜினியுடன் நடித்திருந்தார்.
இந்நிலையில், திரிஷா நடித்த பரமபதம் விளையாட்டு பட விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன் ‘ஒருமுறை சந்தானம் நடித்த படத்தின் தயாரிப்பாளருக்கு உடல்நிலை சரியில்லை. எனவே, சந்தானத்திற்கு பணம் கொடுக்கமுடியவில்லை. எனினும் நான் கேட்டுக்கொண்டதால் பணம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார்.
ஆனால், 3 வருடங்களுக்கு முன்பு யோகிபாபு ஒரு திரைப்படத்தில் நடித்த போது சம்பள பாக்கி இருந்ததால் டப்பிங் பேச மறுத்துவிட்டார். எனவே அப்படம் வெளியாகவே இல்லை. இதுபற்றி அவரிடம் கேட்டன். பிஸியாக இருப்பதால் முடியவில்லை. இதே வருகிறேன். அதோ வருகிறேன் என சொல்கிறார். தற்போது வாய்ப்பு கிடைக்கிறது என்பதற்காக யோகிபாபு பழசை மறக்கக் கூடாது. விரைவில் டப்பிங் பேசி அப்படத்தை வெளியிட அவர் உதவ வேண்டும்’ என அவர் கேட்டுகொண்டார்.





