
அமெரிக்காவின் ஜனாதிபாதி ஆன பின்பு முதன் முறையாக டொனால்ட் டிரம்ப் இந்தியா வந்துள்ளார். தனது மனைவி மெலனியா, மகள் இவான்கா, மருகன் மற்றும் பல பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவர் தனி விமானத்தில் வந்துள்ளார். தற்போது டெல்லியில் இருக்கும் அவர் பின் குஜ்ராத் செல்லவிருக்கிறார்.

இந்நிலையில், அவருக்காக ரூ100 கோடி செலவின் பராமரிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியானது. அதிலும், டெல்லியில் உள்ள ஐடிசி மவுரியா நட்சத்திர ஹோட்டலில் அவர் இன்று தங்கவிருக்கிறார். அதன் ஒரு நாள் இரவுக்கு தங்க ரூ.8 லட்சம் எனக் கூறப்படுகிறது.

இந்த ஆடம்பர ஹோட்டலில் 14வது மாடியில் டிரம்ப் தங்கவுள்ளார். அந்த அறையை மயூரியா சாணக்கியா ஷூட் என அழைக்கிறார்கள். தற்கு முன் அந்த ஹோட்டலில் பில் கிளிண்டன், ஜார்ஜ் டபிள்யு மற்றும் பராக் ஓபாமா ஆகியோர் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.





