
காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலணி, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் செல்வராகவன். சூர்யாவை வைத்து இவர் இயக்கி என்.ஜி.கே கடந்த வருடம் வெளியானது.
இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் தனது அடுத்த படத்தின் கதை பற்றிய தகவலை டிவிட்டரில் தெரிவித்துள்ளார். எனவே, அவர் தனது அடுத்த படத்திற்கு தயராகி விட்டது தெரியவந்துள்ளது.
அவரின் தம்பி தனுஷின் கால்ஷீட் புல்லாக இருப்பதால் வேறு நடிகரையே அவர் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Go all guns blazing during writing the film. Because the movie is totally made there.
— selvaraghavan (@selvaraghavan) February 24, 2020





