ராஜ்கிரண் படத்துக்கு ஹீரோவே கிடைக்கவில்லை-கடைசில யார் சிக்குனான்னு தெரியுமா?

Published on: March 31, 2023
Rajkiran
---Advertisement---

“பார்த்திபன் கனவு”, “சிவப்பதிகாரம்”, “பிரிவோம் சந்திப்போம்”, “மந்திரப்புன்னகை” போன்ற திரைப்படங்களை இயக்கியவர் கரு.பழனியப்பன். இவர் “ஹவுஸ் ஃபுல்”, “துள்ளாத மனமும் துள்ளும்”, “பெண்ணின் மனதை தொட்டு ஆகிய திரைப்படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து தான் இயக்கிய “மந்திரப்புன்னகை” திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

சமீபத்தில் “நட்பே துணை”, “டி பிளாக்” ஆகிய திரைப்படங்களில் நடித்த கரு.பழனியப்பன், “ஆண்டவர்” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் “தமிழா தமிழா” என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகப் புகழ்பெற்றவராக திகழ்ந்து வருகிறார் கரு.பழனியப்பன்.

மூன்று கதாநாயகர்கள்

இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கரு.பழனியப்பன், “ஆண்டவர்” திரைப்படத்தை தொடங்கினார். இதில் ராஜ்கிரண் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. இதுல் மூன்று கதாநாயகர்கள் இடம்பெற்றிருப்பதாக திரைக்கதை எழுதியிருந்தாராம் கரு.பழனியப்பன். ஆனால் பல மாதங்களாக தேடலில் ஈடுபட்டும் மூன்று கதாநாயகர்களை ஒப்பந்தம் செய்யமுடியவில்லையாம். ஆதலால் திரைக்கதையை சற்று மாற்றி ஒரு கதாநாயகனுக்கான படமாக ஆக்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனி ஒப்பந்தமானாராம். விஜய் ஆண்டனி “பிச்சைக்காரன் 2” திரைப்படத்தில் பணியாற்றியபிறகு இத்திரைப்படத்தில் பணியாற்றுவதாக இருந்தது. ஆனால் அவருக்கு நேர்ந்த விபத்து காரணமாக இத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ளமுடியவில்லையாம்.

இந்த நிலையில் தற்போது விஜய் ஆண்டனி முழுமையாக குணமடைந்துவிட்டதால் மிக விரைவில் “ஆண்டவர்” திரைப்படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.