
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஓவியா. நிகழ்ச்சி முடிந்த உடனேயே தனது அழகான முடியை வெட்டி கிராப் தோற்றத்தில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதன்பின் அவர் நடித்து சில திரைப்படங்களும் வெற்றியை எட்டவில்லை.
இந்நிலையில், அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது வெளியான புகைப்படங்களின் தொகுப்பை வெளியிட்டு ‘உங்கள் டி.பி.யும், ஹேர் ஸ்டைலும் மொக்கையாக இருக்கிறது. நீங்கள் ஏன் பிக்பாஸ் ஹேர்ஸ்டைலுக்கு மீண்டும் திரும்பக் கூடாது’ என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஓவியா ‘நான் என் மூளையைத்தான் வளர்க்க விரும்புகிறேனே தவிர முடியை அல்ல. என் தலைமுடி, என் தோல், என் பாலினம் எதுவும் பிரச்சனை இல்லை. நான் எப்போதும் சுதந்திரமானவள். நாங்கள் அழகானவர்கள்’ என பதிவிட்டுள்ளார்.






