
Cinema News
எனக்கு எம்.ஜி.ஆரை பிடிக்காது!.. ஆனா அவரு எனக்கு செய்தது பெரிய விஷயம்!.. உருகும் டெல்லி கணேஷ்…
Published on
By
தமிழ் சினிமாவில் அதிக செல்வாக்கு உடைய நடிகராக இருந்தவர் எம்ஜிஆர். எத்தனையோ சூப்பர் ஸ்டார்கள் அந்த அந்த காலத்தில் வந்து போயிருந்தாலும் எம்ஜிஆர் என்ற ஒரு நடிகரைத்தான் இன்றுவ் வரை அனைவரும் போற்றிக் கொண்டிருக்கிறோம்.
அந்தளவுக்கு மக்கள் செல்வாக்கும் ஆளுமை பலமும் வாய்க்கப்பெற்றவராக எம்ஜிஆர் திகழ்ந்தார். இப்படிப்பட்ட செல்வாக்கு உடைய ஒரு தலைவரை நடிகரை தனக்கு பிடிக்காது என கூறியிருக்கிறார் பிரபல நடிகர் டெல்லி கணேஷ். இவர் ஒரு பேட்டியில் கொடுத்த இந்த பேச்சு தான் இப்போது வைரலாகி வருகின்றது.
டெல்லி கணேஷ் கிட்டத்தட்ட 400 படங்களுக்கும் மேல் நடித்து சாதனை படைத்தவர். குணச்சித்திர வேடங்களில் மிகபெரிய வரவேற்பை பெற்றவர் டெல்லி கணேஷ். இவர் பெரும்பாலும் கமலின் பல படங்களில் நடித்திருப்பவர். சொல்லப்போனால் இவர் படங்களில் கமலை பார்க்கலாம் அல்லது கமலின் படங்களில் இவரை பார்க்கலாம்.
அந்தளவுக்கு கமலும் டெல்லிகணேஷும் நெருங்கி பழகக் கூடிய நண்பர்கள். இந்த நிலையில் டெல்லிகணேஷ் அந்த பேட்டியில் ‘எனக்கு சிவாஜியை பிடித்த அளவுக்கு எம்ஜிஆரை பிடிக்காது, ஏன்னு தெரியல, ஆனால் அது தான் உண்மை ’ என்று சொல்லியிருந்தார். ஆனால் அதே டெல்லிகணேஷை சிறந்த நடிகர் என்ற விருதை கொடுத்து எம்ஜிஆர் கௌரவப்படுத்தினார்.
டெல்லி கணேஷ் ‘பசி’ என்ற படத்தில் கொடூரமான ரிக்ஷாக்காரனாக நடித்திருப்பார். அந்தப் படத்தை பார்த்த எம்ஜிஆருக்கு டெல்லி கணேஷின் அந்த கதாபாத்திரம் எம்ஜிஆருக்கு மிகவும் பிடித்துப் போக சிறந்த நடிகருக்கான விருதை கொடுக்க முன்வந்திருக்கிறார். இதற்கான விழா கலைவாணர் அரங்கத்தில் நடிக்க அனைத்து முன்னனி நடிகர்களும் அங்கு வந்தனராம்.
டெல்லி கணேஷுக்கு முன்பு பல நடிகர்கள் , நடிகைகள் விருதை வாங்கும் போது பல மீடியாக்கள் மேடையின் முன் வந்து புகைப்படங்களை எடுத்தனராம். ஆனால் டெல்லி கணேஷ் வாங்கும் போது மட்டும் அரசு சார்ந்த ஒரு நிரூபர் மட்டும் புகைப்படம் எடுத்தாராம். இதை பார்த்த டெல்லி கணேஷுக்கு வெட்கமாக போய்விட்டதாம். இதனை அறிந்த எம்ஜிஆர் டெல்லி கணேஷ் தோளின் மீது கையை போட்டு மற்ற மீடியாக்களை புகைப்படம் எடுக்க அழைத்திருக்கிறார். இந்த நிகழ்வை மிகவும் பூரிப்போடு டெல்லி கணேஷ் அந்த பேட்டியில் கூறினார்.
STR49 : வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்க ஒரு புதிய படத்தின் வேலைகள் 2 மாதங்களுக்கு முன்பு துவங்கியது. இந்த...
TVK Vijay: கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருப்பவர் விஜய். ஜனநாயகன் படத்திற்கு இவர் வாங்கிய சம்பளம் 225 கோடி...
Vijay: தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது அவர் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்...
Idli kadai: சில சமயம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் நடித்து புதிதாக ரிலீசான திரைப்படத்தை விட அந்த படத்தோடு வெளியான...
Vijay: கரூரில் 41 உயிர்கள் என்பது சாதாரண விஷயம் இல்லை. ஆனால் விஜய் மீதான விமர்சனம், தாக்குதல் நடந்து கொண்டேதான் இருக்கின்றது....