Connect with us
sac

Cinema News

உன் படத்துல விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடு ப்ளீஸ்!.. பார்த்திபனிடம் கெஞ்சிய எஸ்.ஏ.சி!…

திரையுலகில் வாய்ப்பு என்பது எல்லோருக்கும் சுலபமாக கிடைத்துவிடாது. அப்படியே வாய்ப்பு கிடைத்தாலும் ரசிகர்களின் மனதில் இடம்பிடிப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. நல்ல கதை அமைந்து, நல்ல இயக்குனர் படத்தில் நடித்து, அந்த படம் நிற்காமல் படப்பிடிப்பு நடந்து, எந்த சிக்கலும் இல்லாமல் வெளியாகி, அப்படியே வெளியனாலும் ரசிகர்களுக்கு பிடித்து வெற்றி பெற்றால் மட்டும் ஒரு நடிகர் இங்கே அடுத்த படத்தில் நடிக்க முடியும். இதில், எங்கு தேங்கிப்போனாலும் சரி அவருக்கு சினிமாவில் வாழ்க்கை அவ்வளவுதான்.

Vijay
Vijay

நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரின் மகனாக இருந்தால் சுலபமாக ஹீரோ வாய்ப்பு கிடைத்துவிடும். ஆனால், படம் வெற்றி பெற நல்ல டீம் அமையவேண்டும். தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவருக்கென ஒரு மார்க்கெட் உருவாகும். திரையுலகில் பிரபலங்களின் வாரிசுகள் பலர் சினிமாவில் களம் இறங்கி நடித்தனர். ஆனால், எல்லோராலும் முன்னணி நடிகராக மாற முடியவில்லை. சிலர் மட்டுமே உச்சம் தொட்டுள்ளனர். அதில் விஜய் முக்கியமானவர்.

அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்குனர் என்பதால் அடம்பிடித்து ஹீரோவாக அறிமுகமானார். ஆனால், இவர் நடித்த படங்கள் பெரிய வெற்றியை பெற்று ரசிகர்களை கவரவில்லை. எனவே, பெரிய நடிகர்களின் படங்களில் விஜய் நடித்தால் ரசிகர்களிடம் ரீச் ஆகலாம் என கணக்குப்போட்ட எஸ்.ஏ.சி. அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த பலரிடமும் கோரிக்கை வைத்தார்.

Vijay and SAC
Vijay and SAC

இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த பார்த்திபன் ‘விஜயின் அப்பா என்னிடம் நீ நடிக்கும் படத்தில் உன் தம்பியாக விஜயை நடிக்க வை’ என அடிக்கடி என்னிடம் கேட்பார். ஆனால், அது நடக்கவில்லை. துவக்கம் எல்லோருக்கும் சிரமமாகத்தான் இருக்கும்’ என்று பேசியுள்ளார்.

எஸ்.ஏ.சியின் இந்த கோரிக்கையை ஏற்று விஜயை தனது தம்பியாக நடிக்க வைத்தவர் விஜயகாந்த் மட்டுமே. விஜயகாந்தை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றியவர் எஸ்.ஏ.சந்திரசேகர்தான். அந்த நன்றி கடனுக்காகவே எஸ்.ஏ.சி இயக்கிய செந்தூரப்பாண்டி படத்தில் விஜயின் அண்ணனாக நடித்து கொடுத்தார். அந்த படமும் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Also Read: லோகேஷ் கனகராஜின் புதிய படத்தில் யார் ஹீரோ தெரியுமா?!.. இது லிஸ்ட்லயே இல்லையே!..

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top