Connect with us
MGR

Cinema News

எம்.ஜி.ஆர் முன் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்த பிரபல நடிகை… அடுத்து நடந்த சம்பவம் என்ன தெரியுமா?

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு இருந்த செல்வாக்கு குறித்து சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். அவர் முன் தைரியமாக பேசுவதற்கு கூட தயங்குவார்கள். அந்த அளவுக்கு மிகப்பெரும் ஜாம்பவானாக திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர் நாடக மன்றம்

எம்.ஜி.ஆர் தமிழ் சினிமாவின் மிகப் பெரிய நட்சத்திர நடிகராக உயர்ந்தாலும், அவர் தொடக்கத்தில் பல நாடகங்களில் நடித்திருக்கிறார். நாடக உலகில் இருந்துதான் சினிமாவிற்குள் நுழைந்தார் எம்.ஜி.ஆர். அக்காலகட்டத்தில் சினிமாவில் மிகப் புகழ்பெற்றவர்கள் பலருமே நாடகத்தில் இருந்து வந்தவர்களாகத்தான் இருப்பார்கள். ஆதலால் பல நடிகர்கள் சினிமாவில் பிரபலமானாலும் நாடகத்திலும் நடித்துக்கொண்டிருந்தார்கள். சிவாஜி கணேசன் அவ்வாறு சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக வளர்ந்த பிறகும் கூட நாடகத்தில் நடித்திருக்கிறார்.

அதே போல் எம்.ஜி.ஆர், சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உயர்ந்தாலும் சொந்தமாக “எம்.ஜி.ஆர் நாடக மன்றம்” என்று ஒன்றை நடத்தி வந்தார். அதில் பல நடிகர்கள் இருந்தனர். அதில் இருந்து பலரும் சினிமாவிற்குள் நுழைந்தார்கள். அப்படி நுழைந்தவர்களில் நடிகர் செந்தாமரையும் அவரது மனைவி கௌசல்யா செந்தாமரையும் அடங்குவார்கள்.

எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே இருவரும் திருமணம் செய்துகொண்டனர் என்பது இதில் குறிப்பிடத்தக்கது. இதில் கௌசல்யா செந்தாமரை சிறு வயதில் இருந்தே எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தில் நடித்து வருகிறார். அப்போது அங்கே நடந்த ஒரு சம்பவத்தை குறித்து கௌசல்யா செந்தாமரை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

கால் மேல் கால் போட்டு…

எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தில் ஒரு முறை எம்.ஜி.ஆர் உட்கார்ந்திருக்கும்போதே அவருக்கு கொஞ்சம் அருகில் உட்கார்ந்திருந்த கௌசல்யா செந்தாமரை கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தாராம். அந்த காலகட்டத்தில் கௌசல்யா செந்தாமரைக்கு சின்ன வயது என்பதால், அவ்வளவாக விவரம் தெரியாதாம்.

கௌசல்யா செந்தாமரை கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்ததை பார்த்த ஒரு மூத்த நடிகை சைகையிலேயே காலை “கீழே போடு” என கூறினாராம். அதன் பிறகுதான் அவர் காலை கீழே போட்டாராம்.

அதன் பின் எம்.ஜி.ஆர் கிளம்பி சென்றதும் அந்த மூத்த நடிகை அவரை அழைத்து முதுகில் பளார் என அறைந்தாராம். “எம்.ஜி.ஆர் எவ்வளவு பெரிய ஆளு. அவர் முன்னாடி கால் மேல கால் போட்டு உட்கார்ந்திருக்க” என கண்டபடி திட்டினாராம். எனினும் “எம்.ஜி.ஆர் இதை எல்லாம் கண்டுகொள்ளமாட்டார்” என அப்பேட்டியில் கௌசல்யா செந்தாமரை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
Arun Prasad
Continue Reading

More in Cinema News

To Top