Cinema News
அந்த ரஜினி படம் ஃப்ளாப் ஆனதுக்கு காரணம் இதுதான்- இவ்வளவு ஓப்பனாவா பேசுறது!!
Published on
“யானைக்கும் அடி சறுக்கும்” என்ற பழமொழிக்கு ஏற்ப, ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் அவருடைய பல திரைப்படங்கள் தோல்வியடைந்திருக்கின்றன. ரஜினிகாந்த் கனவுத் திரைப்படங்களாக உருவாக்கிய, “ஸ்ரீராகவேந்திரா”, “பாபா” ஆகிய திரைப்படங்களுமே தோல்வியடைந்தது. இதனால் ரஜினிகாந்த் மிகவும் வருத்தத்திற்குள்ளானார்.
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான “அண்ணாத்த” திரைப்படமும் தோல்வியடைந்தது. அதே போல் “அண்ணாத்த” திரைப்படத்திற்கு முன்பு அவர் நடித்த “தர்பார்” திரைப்படமும் தோல்வியடைந்தது. இவ்வாறு சமீபத்தில் வெளியான இரண்டு திரைப்படங்களுமே தோல்வியடைந்ததால் “ஜெயிலர்” திரைப்படம் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
தர்பார் படம் தோல்விக்கு காரணம்
இந்த நிலையில் “தர்பார்” திரைப்படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டுள்ளார். அதில் “தர்பார்” திரைப்படத்தின் தோல்விக்கான காரணம் குறித்து ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
“தர்பாரை பொறுத்தவரை ஒரு கட்டத்திற்கு மேல் இவ்வளவு எளிதாக ஸ்கிரிப்ட் எழுத வந்துவிட்டது என்ற தவறான புரிதல் எனக்கு இருந்தது. ரஜினி சார் அந்த ஆண்டு ஆகஸ்து மாதம் கட்சி தொடங்குவதாக இருந்தார். ஆதலால் மார்ச் மாதம் ஆரம்பித்து ஜூன் மாதம் படப்பிடிப்பை முடித்துவிட வேண்டும் என்ற நிலை இருந்தது. இந்த படத்தை எப்படியாவது ஹிட் ஆக்க வேண்டும் என்று ஒரு கணக்கு போட்டேன். அதில்தான் தவறு வந்துவிட்டது” என்று கூறியிருந்தார்.
GoatMovie: விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தில் முக்கிய பிரபலம் ஒருவர் இணைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த...
திருவிளையாடல் புராணத்தில் இருந்து ஒரு சில காட்சிகளை எடுத்துக் கையாண்ட படம் தான் திருவிளையாடல். இயக்கியவர் ஏ.பி.நாகராஜன். இந்தப் படத்தில் வரும்...
இளையராஜா, வைரமுத்து பிரச்சனை பற்றியும், சன்பிக்சர்ஸ் மீது இளையராஜா போட்ட வழக்கு பற்றியும் பிரபல யூடியூபர் பயில்வான் ரங்கநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்....
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் எழில் அமிர்தாவிடம் எனக்கு இன்னும் சில கடமைகள் இருக்கு அது முடித்தவுடன் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்கிறார்....
நடிகை திரிஷாவின் 41வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. திரிஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு லைகா நிறுவனம் போட்டுள்ள வாழ்த்துக்கள் ட்வீட்டை பார்த்தா...