மாஸ்டர் இசை வெளீயீடு எப்போது ? எங்கே ? – நறுக் அப்டேட் !

Published on: February 24, 2020
---Advertisement---

ce3025f3106f59382650d39deb261745

மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் நடைபெற வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்துள்ளது. இந்த படத்தில் இவர்களுடன் மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ்,  மேத்யூ ப்ரேம், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள்  ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் முதல்முறையாக விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்து வருகிறார்.

இந்தப் படம் கோடைவிடுமுறையை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில் எப்போது படத்தின் இசைவெளியீட்டு விழா நடக்கும் என்று ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழாக்கள் பிரம்மாண்டமாக சென்னையில் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆனால் இம்முறை விழா சென்னையில் இல்லாமல் கோவையில் நடத்தப்படலாம் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே நண்பன் படத்தின் விழா அங்குதான் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த படத்தில் நடிக்கும் சாந்தனு விரைவில் மாஸ்டர் குழுவோடு உங்களை கோவையில் சந்திக்கிறோம்’ என ஒரு டிவீட்டை தட்டியுள்ளார்.

Leave a Comment