
Cinema News
நான் ஹார்ட் அட்டாக் வந்து செத்தா அதுக்கு இந்த நடிகைதான் காரணம்! – பாரதிராஜாவை துரத்திய நடிகை!..
Published on
By
இயக்குனர்களின் இமையம் என தமிழ் சினிமாவில் அழைக்கப்படுபவர் இயக்குனர் பாரதிராஜா. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான கதைகளை இயக்கியவர். அவர் காலத்தில் அவரை போல கதைகளை தேர்ந்தெடுக்கும் மற்றொரு இயக்குனர் இல்லை என கூறலாம்.
அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் புதிய புதிய கதைகளை தேர்ந்தெடுத்துள்ளார் பாரதிராஜா. வயதான காலத்தில் இளம் பெண்ணுடன் கதாநாயகனுக்கு காதல் வருவது போல எடுக்கப்பட்ட திரைப்படம் முதல் மரியாதை. அதே போல சாதிக்குறித்து கேள்விகளை எழுப்பும் விதமாக வேதம் புதிது என்கிற படத்தை இயக்கியிருந்தார்
1993 இல் பாரதி ராஜா இயக்கத்தில் கேப்டன் மகள் என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் வரும் எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று என்கிற பாடல் மிகவும் பிரபலம். இந்த படத்தில் நடிகை குஷ்பு கதாநாயகியாக நடித்திருந்தார்.
பெரும் இயக்குனர் என்றாலும் பாரதிராஜா பாம்பை கண்டாலே ஆகாது. பாம்பின் மீது பெரும் பயம் கொண்டவர் பாரதிராஜா. பாம்பை பார்த்தாலே தனக்கு படபடவென வந்துவிடும் என்பார் பாரதிராஜா. இந்த நிலையில் ஒருமுறை படப்பிடிப்பு தளத்தில் குஷ்பு சென்று கொண்டிருந்தார்.
பாரதிராஜாவை பயமுறுத்திய குஷ்பு:
அப்போது அங்கு பல் பிடுங்கப்பட்ட பாம்புகளை வேறு படப்பிடிப்பிற்காக வைத்திருந்தனர். குஷ்புவிற்கு பாம்பின் மீது அவ்வளவாக பயம் கிடையாது. எனவே அவர் பாரதி ராஜாவை பயமுறுத்த நினைத்தார். அந்த பாம்புகளை இரண்டு கைகளிலும் தூக்கி கொண்டு நேராக பாரதிராஜாவிடம் வந்த குஷ்பு.
சார் இந்தா பாருங்க என பாம்பை நீட்டியுள்ளார். அதை பார்த்து அதிர்ச்சியான பாரதிராஜா வேகமாக எழுந்து ஓட துவங்கியுள்ளார். குஷ்புவும் விடாமல் துரத்திக்கொண்டு வந்துள்ளார். ஒரு வழியாக படக்குழுவினர் குஷ்புவை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
உடல் வியர்த்துப்போய் நின்ற பாரதிராஜா. ஏய் நான் ஹார்ட் அட்டாக் வந்து செத்தா அதுக்கு அவதாண்டா காரணம் என திட்டியுள்ளார். இதை குஷ்பு ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: மேடையில் அடம்பிடித்த இளையராஜா… அதட்டிய எம்.ஜி.ஆர்.. அட அவரு அப்பவே அப்படித்தான்!…
STR49 : வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்க ஒரு புதிய படத்தின் வேலைகள் 2 மாதங்களுக்கு முன்பு துவங்கியது. இந்த...
TVK Vijay: கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருப்பவர் விஜய். ஜனநாயகன் படத்திற்கு இவர் வாங்கிய சம்பளம் 225 கோடி...
Vijay: தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது அவர் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்...
Idli kadai: சில சமயம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் நடித்து புதிதாக ரிலீசான திரைப்படத்தை விட அந்த படத்தோடு வெளியான...
Vijay: கரூரில் 41 உயிர்கள் என்பது சாதாரண விஷயம் இல்லை. ஆனால் விஜய் மீதான விமர்சனம், தாக்குதல் நடந்து கொண்டேதான் இருக்கின்றது....