Cinema History
பாத்ததும் காதலில் விழுந்த மணிவண்ணன்!.. தாடிக்கு பின்னாடி இப்படி ஒரு ரொமான்ஸ்!…
தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக பல படங்களில் கலக்கியவர் மணிவண்ணன். கோவையை சேர்ந்த மணிவண்ணன் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக வேலை செய்தவர். பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் கூட மணிவண்ணன் எழுதிய கதைதான். பாரதிராஜா இயக்கிய நிழல்கள் படத்திற்கும் மணிவண்ணன் வசனம் எழுதியிருந்தார். பாரதிராஜவின் பல படங்களில் வேலை செய்த மணிவண்ணன் கோபுரம் சாய்வதில்லை திரைப்படம் மூலம் இயக்குனராக மாறினார். முதல் படமே வெற்றி.
அதன்பின் தொடர்ந்து படங்களை இயக்கினார். குறிப்பாக பிரபு மற்றும் சத்தியராஜை வைத்து அதிக படங்களை இயக்கினார். அதில் 100வது நாள், ஜல்லிக்கட்டு, 24 மணி நேரம், அமைதிப்படை ஆகிய படங்களில் அசத்தலான வில்லனாக சத்தியராஜை நடிக்க வைத்தார். இதில் அமைதிப்படை திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அதில் இடம் பெற்றிருந்த அரசியல் வசனங்களும், அரசியல் தொடர்பான காட்சிகளும் எந்த காலத்திலும் அரசியலுக்கு பொருந்தும். அதுதான் மணிவண்ணன். மணிவண்ணன் இயக்கிய கடைசி திரைப்படம் நாகராஜ சோழன் எம்.ஏ. அதன்பின் உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மணிவண்னன் 2013ம் ஆண்டு மரணமடைந்தார்.
மணிவண்ணனுக்கு திருமணம் நடந்தது ஒரு சுவாரஸ்யமான கதை ஆகும். இயக்குனர் பாரதிராஜாவிடம் மணிவண்ணன் உதவியாளராக இருந்த போது, பாரதிராஜாவுக்கு தெரிந்த ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடி வந்துள்ளனர். அவர்களின் வீட்டுக்கு பாரதிராஜாவும், மணிவண்ணனும் ஒருமுறை சென்றனர். அதன்பின் இருவரும் காரில் திரும்பி வந்து கொண்டிருந்த போது ‘அந்த பெண்ணை நானே திருமணம் செய்து கொள்கிறேன்’ என தனது விருப்பத்தை மணிவண்ணன் சொல்ல பாரதிராஜா எதுவுமே சொல்லவில்லையாம். அதன்பின் அதுபற்றி மணிவண்ணனிடம் பாரதிராஜா எதுவும் பேசவில்லை. ஆனால், ஒரு வருடத்திற்கு பின் பாரதிராஜாவே அந்த பெண்ணின் வீட்டில் பேசி அப்பெண்ணை மணிவண்ணனுக்கு திருமணம் செய்து வைத்தாராம்.
பார்த்ததும் காதல் கொண்ட மணிவண்ணன் செங்கமலம் என்ற அந்த பெண்ணை திருமணம் செய்தார். ரகுவரன் என்கிற மகனும், ஜோதி என்கிற பெண்ணும் அவருக்கு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.