
Cinema News
அந்த தனுஷ் படத்துக்கு அப்புறம் ரொம்ப வேதனைப்பட்ட இயக்குனர்! – இதுதான் காரணமாம்!..
Published on
By
தனுஷ் தனது திரைப்படங்கள் மூலம் பல இயக்குனர்கள் முன்னேற வழி செய்துள்ளார். வெற்றிமாறனுக்கு கூட முதல் படத்திலேயே நடிகர் தனுஷ்தான் வாய்ப்பு கொடுத்தார். அதே போல மற்றொரு இயக்குனருக்கும் வாய்ப்பு கொடுத்தார் தனுஷ்.
ஆனால் அந்த படமே அந்த இயக்குனருக்கு ஒரு கசப்பான நினைவாக அமைந்துவிட்டது. தமிழில் 2007 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் யாரடி நீ மோகினி. இந்த திரைப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
இந்த படத்தின் இயக்குனர் மித்ரன் ஆர் ஜெவஹருக்கு இது முதல்படமாகும். படத்தின் கதையை இயக்குனர் செல்வராகவன் ஏற்கனவே எழுதியிருந்தார். அந்த கதையைதான் மித்ரன் படமாக்கினார். மித்ரன் ஆர் ஜெவஹர் ரகுவரனின் மிகப்பெரிய ரசிகனாவார்.
எனவே அவர் தனது முதல் படத்திலேயே ரகுவரன் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டார். எனவே தனுஷின் தந்தை கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ரகுவரனிடம் சென்று பேசினார் இயக்குனர். ரகுவரனும் அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
ரகுவரன், தனுஷ் காம்போவில் மிக சிறப்பான ஒரு திரைப்படமாக யாரடி நீ மோகினி திரைப்படம் வந்தது. அந்த படத்தின் பாதியிலேயே ரகுவரன் இறப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் படப்பிடிப்பு முடிந்து சிறிது நாட்களில் உண்மையாகவே இறந்தார் ரகுவரன்.
எனவே யாரடி நீ மோகினி திரைப்படமே ரகுவரனுக்கு இறுதி படமாக அமைந்தது. இதனால் மிகவும் வருத்தத்தில் இருந்தார் இயக்குனர் மித்ரன் ஜெவஹர். இந்த நிலையில் படம் வெளியான பிறகு பத்திரிக்கையாளர் பலரும் அவரை சந்தித்தப்போது படத்தில் வரும் ரகுவரனின் இறுதி சடங்கு காட்சிகள் நிஜமாக நடந்ததில் இருந்து படம் பிடிக்கப்பட்டதா? என கேட்டுள்ளனர்.
இதனால் யாரடி நீ மோகினி திரைப்படத்திற்கு பிறகு அதிக வேதனைகளை அனுபவித்ததாக இயக்குனர் மித்ரன் ஆர் ஜெவஹர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: என்னிடம் யாரும் கேட்காத கேள்வியை விஜய் கேட்டார்!.. அசந்துட்டேன்!.. ராதாரவி பகிர்ந்த ரகசியம்!…
விடுதலை 2 திரைப்படத்திற்கு பின் சூர்யாவை வைத்து வாடிவாசல் எடுக்க திட்டமிட்டிருந்தார் வெற்றிமாறன். ஆனால் முழுக்கதையும் ரெடி ஆகாததால் சூர்யா நடிக்க...
Parasakthi: அமரன் படத்திற்கு பின் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடிக்க தொடங்கினார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமில்லாமல்...
STR49: வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சிம்பு நடிப்பில் ஒரு படம் உருவாகவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது....
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான குட் பேட் அக்லி சூப்பர் ஹிட் அடித்ததால் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக்கே...
AK64: ஆதிக் ரவிச்சந்திரன் அடிப்படையில் ஒரு தீவிரமான அஜித் ரசிகர். திரிஷா இல்லனா நயன்தாரா என்கிற திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக...