Connect with us

Cinema News

முதல்ல உன்னை உதைக்கணும்! எந்த ஊரு உனக்கு? – தொகுப்பாளரை மிரட்டிய ரஜினி பட நடிகர்!

தமிழில் துணைக்கதாபாத்திரங்களில் நடித்தாலும் கூட பலரையும் கவரும் வகையில் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி விடுவதுண்டு. அப்படியாக நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களை மக்கள் மறப்பதில்லை. அவரது பெயரே அவர்களுக்கு தெரியாவிட்டாலும் கூட அவரை அடையாளம் காண அவர்களால் முடியும்.

அப்படி தமிழில் துணை நடிகராக நடித்தே பிரபலமானவர்தான் நடிகர் ஜான் விஜய். இவர் 2006 முதலே தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஜான் விஜய். ஆனால் வாயை மூடி பேசவும், கலகலப்பு போன்ற திரைப்படங்களில்தான் இவருக்கு கொஞ்சம் முக்கியமான கதாபாத்திரங்கள் கிடைத்தன. அதன் வழியே மக்களிடம் இவர் பிரபலமானார்.

தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித்திடம் நண்பராக இருந்து வருகிறார் ஜான் விஜய். பா.ரஞ்சித் இவருக்கு கபாலி மற்றும் சார்பாட்டா பரம்பரை திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்கள் வழங்கியிருந்தார். சமீபத்தில் ஒரு பேட்டியில் பா.ரஞ்சித்திற்கும் இவருக்குமிடையே உள்ள நட்பு பற்றி கேட்கப்பட்டது.

அதற்கு அவர் பதிலளிக்கும்போது “பா.ரஞ்சித் எனக்கு தம்பி மாதிரியானவர். அவர் இயக்கும் படங்களில் எனக்கு எப்போதும் வில்லன் கதாபாத்திரம் தர மாட்டார். அண்ணன் உனக்கு வில்லன் கதாபாத்திரம் எழுத தோண மாட்டேங்குது அண்ணே என கூறுவார் ரஞ்சித். இதனாலேயே எனக்கு ரஞ்சித் படத்தில் நல்ல கதாபாத்திரங்களே அமையும் என கூறியுள்ளார் ஜான் விஜய்.

அப்போது பாலிவுட் சினிமாவையும் தமிழ் சினிமாவையும் ஒப்பிட்டு பேசினார் தொகுப்பாளர். இதனால் கடுப்பான ஜான் விஜய், என்ன தமிழ் சினிமாவையே கேவலமா பேசுறியா? முதல்ல உன்ன உதைக்கணும். எந்த ஊரு உனக்கு? என விளையாட்டாக மிரட்ட துவங்கிவிட்டார். அதன் பிறகு அமைதியாகி உள்ள சினிமாக்களிலேயே தமிழ் சினிமாதான் பெஸ்ட் என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: நாத்திகனாக இருந்த சுருளிராஜனை ஆத்திகன் ஆக்கிய வியப்பான சம்பவம்… என்னப்பா சொல்றீங்க?

Continue Reading

More in Cinema News

To Top