Connect with us

Cinema News

தியேட்டர்லயே அடி வாங்கிய சேத்தன்.. – எல்லாம் விடுதலை படம் பார்க்க போனதால் வந்த விளைவு!..

தற்சமயம் திரையரங்கில் வெளியாகி ஹிட் கொடுத்து வரும் விடுதலை திரைப்படம் பல நட்சத்திரங்களுக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்துள்ளது.

மிக முக்கியமாக நடிகர் சூரிக்கு டர்ன் ஓவராக விடுதலை திரைப்படம் உள்ளது. அதே போல இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள நடிகை பவானி ஸ்ரீக்கும் இது மிக முக்கியமான திரைப்படமாக அமைந்துள்ளது. சின்ன திரையிலேயே சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர் சேத்தனும் இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சின்னத்திரையில் அவர் நடித்த விடாது கருப்பு தொடர் தமிழக அளவில் மிகவும் பிரபலமான தொடராகும். இந்த தொடர் கொடுத்த வெற்றியை தொடர்ந்தே தமிழ் சினிமாவிலும் இவர் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

தியேட்டரில் நடந்த சங்கடம்:

விடுதலை படத்தில் மிகவும் மோசமான போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சேத்தன். அந்த கதாபாத்திரத்தை பார்க்கும் எவருக்கும் கோபம் வரும் வகையில் அது அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது மனைவி ப்ரியதரிஷினியுடன் படத்தை பார்க்க சென்றுள்ளார் சேத்தன்.

அங்கு படத்தில் சேத்தன் மோசமான விஷயங்களை செய்யும் காட்சிகள் வரும்போதெல்லாம் அவரை அடித்துள்ளார் அவரது மனைவி. எதுக்காக இவ்ளோ மோசமா நடந்துக்குற என திட்டியுள்ளார். மனைவியுடன் படத்துக்கு வந்ததே தவறு என யோசித்துள்ளார் சேத்தன். இதை ஒரு பேட்டியில் அவரே கூறியுள்ளார்.

Continue Reading

More in Cinema News

To Top