Cinema History
இனிமே இந்த மாதிரி ஆனுச்சுன்னா அவ்வளவுதான்! – ட்ரைவரால் கடுப்பான எம்.ஜி.ஆர்!..
தமிழ் சினிமாவில் விஜயகாந்திற்கு முன்பு அனைத்து நடிகர்களுக்கு நன்மை செய்யும் ஒரு நபராக இருந்தவர் எம்.ஜி.ஆர். பல நடிகர்களுக்கு பல விதங்களில் உதவி செய்துள்ளார். நடிகர் ராமராஜன் திருமணத்தில் பிரச்சனை ஏற்பட்டபோது அதை எம்.ஜி.ஆர்தான் சரி செய்தார்.
திரைத்துறையில் மட்டுமின்றி தன்னிடம் பணிப்புரியும் ஊழியர்களுக்கும் கூட அவர் நன்மைகள் செய்துள்ளார். அதனால்தான் எம்.ஜி.ஆர் இறந்து இவ்வளவு ஆண்டுகள் ஆகியும் அவருடைய புகழ் அப்படியே இருக்கிறது.
ஒருமுறை கட்சி ரீதியாக அரசியல் பிரமுகர்களுடன் ஒரு மீட்டிங் நடந்தது. எம்.ஜி.ஆர் காரில் அந்த மீட்டிங்கிற்கு சென்றார். அந்த மீட்டிங் ஒரு ஸ்டார் ஹோட்டலில் நடந்தது. எனவே விலை உயர்ந்த சாப்பாடுகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆரும் சாப்பிட்டுவிட்டு காருக்கு வந்தார்.
சாப்பிடாத ட்ரைவர்:
அங்கு ட்ரைவர் அமர்ந்திருந்தார். ட்ரைவர் சாப்பிட்டுவிட்டாரா? என தெரியவில்லையே என யோசித்த எம்.ஜி.ஆர் ட்ரைவரிடம் சென்று சாப்பிட்டு விட்டீர்களா? என கேட்டார். ட்ரைவரும் உடனே சாப்பிட்டேன் ஐயா என கூறியுள்ளார். என்ன சாப்பிட்டீர்கள் என கேட்க ட்ரைவர் சமாளிப்பதற்காக சில உணவுகளை கூறி அதை சாப்பிட்டதாக கூறினார்.
உடனே எம்.ஜி.ஆர், இது எதுவுமே அங்கே சாப்பிட கொடுக்கலையே… நீங்க எங்கே சாப்பிட்டீர்கள் என கேட்டுள்ளார். இதற்கு மேலும் உண்மையை மறைக்க முடியாது என்பதை உணர்ந்த ட்ரைவர் “ஐயா அது ஸ்டார் ஹோட்டல், உங்களை மாதிரி பெரிய ஆட்களுக்கு மட்டும்தான் அங்க சாப்பாடு. எங்களுக்கு எல்லாம் கிடையாது ஐயா, நான் வீட்டுக்கு போய் சாப்பிட்டுக்கிறேன் என கூறியுள்ளார்.
இதை கேட்டு கடுப்பான எம்.ஜி.ஆர் வேகமாக அலுவலகத்திற்கு சென்று இனி ட்ரைவர்களுக்கும் சாப்பாடு போட வேண்டும். அதற்கு எவ்வளவு செலவாகிறதோ அதை நான் தருகிறேன் என சத்தமிட்டுவிட்டு வந்துள்ளார். இப்படியாக அனைவருக்கும் உதவும் காரணத்தாலேயே அவர் புரட்சி தலைவர் என அழைக்கப்படுகிறார்.