Cinema History
அண்ணனோட வாய்ப்பை எல்லாம் பிடுங்கி சினிமாவிற்குள் வந்தேன்.. – ஓப்பனா சொன்ன இசையமைப்பாளர்!..
சினிமாவை பொறுத்தவரை நமது முகத்திற்கு தெரிந்து நம்மால் அறியப்படும் பிரபலங்கள் குறைவானவர்களே. ஒரு திரைப்படம் எடுக்கப்படும்போது ஏகப்பட்ட ஊழியர்கள் அதில் பணிப்புரிகின்றனர். அப்படி பணிப்புரிகிறவர்கள் அனைவரையும் மக்களுக்கு தெரியாது.
ஆனால் திரைத்துறையில் அவர்களுக்கு மிகுந்த செல்வாக்கு இருக்கும். தமிழ் திரை துறையில் அப்படி ஒரு செல்வாக்கு மிகுந்த கலைஞர்களாக இருந்தவர்கள்தான் சபேஸ் மற்றும் முரளி சகோதரர்கள். பல வருடங்களாக தமிழ் சினிமாவில் இசை கருவிகளை வாசிப்பவர்களாக இருந்து வருகின்றனர் சபேஷ் முரளி சகோதரர்கள். சொக்க தங்கம், பாட்ஷா மாதிரியான பல படங்களில் இவர்கள் பணிப்புரிந்துள்ளனர்.
ஒரு சில படங்களில் இசையமைப்பாளராகவும் பணியாற்றி உள்ளனர். தமிழ் திரையுலகில் எம்.எஸ்.வியை தவிர்த்து அனைத்து இசையமைப்பாளர்களிடமும் இவர்கள் பணியாற்றி உள்ளனர். பள்ளி பருவக்காலம் முதலே இவர்களுக்கு இசையின் மீது ஆர்வம் இருந்தது.
அண்ணனின் வாய்ப்பை பறித்த தம்பி:
சபேஷ் ஆரம்பக்காலங்களில் இருந்தே கீபோர்டு வாசிப்பதில் திறமையானவராக இருந்தார். ஆனால் முரளி ஆரம்பக்காலக்கட்டங்களில் தபேலாதான் வாசித்து வந்தார். ஆனால் தபேலாவை விட கீபோர்டுக்குதான் தமிழ் சினிமாவில் அதிக வாய்ப்புகள் இருந்தன.
அந்த சமயங்களில் இவர்கள் நிறைய நிகழ்ச்சிகளில், நாடகங்களிலும் கருவிகளை வாசித்து வந்தனர்.அப்போது சபேஷ் சினிமாவில் சற்று பிஸியாக இருந்த காரணத்தினால் பலமுறை நாடகங்களுக்கு வாசிக்க வர முடியாமல் போனது.
இந்த நிகழ்வை பயன்படுத்திக்கொண்டா முரளி, அண்ணனுக்கு பதிலாக அவரே கீபோர்டு வாசிக்க துவங்கினார். அதன் பிறகு நாடக கம்பெனியில் சபேஷை நீக்கிவிட்டு முரளியை வைத்தே கீபோர்டு வாசித்துள்ளனர். பிறகு அதே திறமையை பயன்படுத்தி அவரும் தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்துவிட்டார். இந்த நிகழ்வை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.