
Cinema News
ஒரு சீனுக்காக மூன்று நாட்கள் காத்திருந்த ரகுவரன்.. – பிரபல நடிகரை இப்படி வெயிட் பண்ண வைக்கலாமா?
Published on
By
தமிழ் சினிமாவில் உள்ள வில்லன் நடிகர்களில் பிரபலமானவர் நடிகர் ரகுவரன். ஹீரோவாக நடிப்பதற்கான ஸ்டைலான முக அமைப்பை கொண்டிருந்தாலும் கூட ஏனோ ரகுவரன் தமிழ் சினிமாவில் வில்லனாகவே நடித்து வந்தார்.
வில்லன் கதாபாத்திரம் மட்டுமின்றி மகன், அண்ணன், அப்பா மாதிரியான கதாபாத்திரங்களிலும் கூட இவர் சிறப்பாக நடித்துள்ளார். திரைப்படங்களை பொறுத்தவரை ரகுவரன் அதில் இயக்குனருக்கு எதிராக எந்த தலையீடும் செய்ய மாட்டார். இயக்குனர் சொல்வது போலவே நடித்துக்கொடுக்க கூடியவர் ரகுவரன்.
இயக்குனர் சரண் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு பிரசாந்த், லைலா, சிம்ரன் ஆகியோர் நடித்து பார்த்தேன் ரசித்தேன் என்ற திரைப்படம் வந்தது. அந்த திரைப்படத்தில் சிம்ரனின் அண்ணனாக நடிகர் ரகுவரன் நடித்திருந்தார். எப்போதும் இயக்குனர் சரண் படத்திற்கான முழு திரைக்கதையையும் எழுதிவிட்டு படத்தை எடுப்பதில்லை.
ஒரு சுருக்கத்தை மட்டுமே எழுதி வைத்துக்கொள்வார். பிறகு படப்பிடிப்பு தளத்திற்கு சென்றபிறகு அங்கு எப்படி படத்தை எடுக்கலாம் என்பதை பொறுத்து படத்தின் வசனங்கள், காட்சிகளை எழுதுவார். இந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகள் மூன்று நாளைக்கு எடுக்கப்பட இருந்தது.
காத்திருந்த ரகுவரன்:
ஆனால் அந்த காட்சியில் எங்கு ரகுவரனை சேர்ப்பது என்பது இயக்குனருக்கு பெரும் குழப்பமளிக்கும் விஷயமாக இருந்தது. எனவே அவர் ரகுவனையே அழைத்து இதுக்குறித்து கேட்டார். அதற்கு பதிலளித்த ரகுவரன், ஒன்னும் பிரச்சனை இல்லை சார் நான் வீட்டுக்கு போறேன். நீங்க க்ளைமேக்ஸ் எடுங்க.
ஒருவேளை க்ளைமேக்ஸ் காட்சியில் நான் முக்கியமா வந்தாகணும்னு தோணுனா கூப்பிடுங்க. நான் வெயிட் பண்றேன் என கூறி சென்றுவிட்டார் ரகுவரன். மூன்றாவது நாள் ரகுவரன் படத்தில் வரும் காட்சி இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்த இயக்குனர் ரகுவரனுக்கு போன் செய்துள்ளார்.
உடனே வந்த ரகுவரன் அந்த காட்சியை நடித்து கொடுத்துள்ளார். அந்த அளவிற்கு திரைப்படம் இயக்குனருக்கு பிடித்த வகையில் வரவேண்டும் என்பதில் முக்கியத்துவம் கொடுத்துள்ளார் ரகுவரன்.
Vijay Devarakonda: கன்னட சினிமாவில் நடிக்க துவங்கி அதன்பின் தெலுங்கு சினிமாவுக்கு சென்று ரசிகர்களிடம் பிரபலமாகி தமிழ், ஹிந்தி என கலக்கி...
STR49 : வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்க ஒரு புதிய படத்தின் வேலைகள் 2 மாதங்களுக்கு முன்பு துவங்கியது. இந்த...
TVK Vijay: கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருப்பவர் விஜய். ஜனநாயகன் படத்திற்கு இவர் வாங்கிய சம்பளம் 225 கோடி...
Vijay: தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது அவர் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்...
Idli kadai: சில சமயம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் நடித்து புதிதாக ரிலீசான திரைப்படத்தை விட அந்த படத்தோடு வெளியான...