சூப்பர் ஸ்டாருக்கான தகுதி இருக்கா?- விஜய்யை கண்டபடி விமர்சித்த காமெடி நடிகர்…

Published on: April 11, 2023
Super Star
---Advertisement---

விஜய் தமிழ் சினிமாவின் டாப் நடிகராக திகழ்ந்து வருகிறார் என்பதை எவராலும் மறுக்க முடியாது. தமிழகத்தில் மட்டுமல்லாது உலகளவில் ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் ரசிகர்களை குவித்திருப்பவர் விஜய்தான்.

விஜய்தான் சூப்பர் ஸ்டார்

இந்த நிலையில் “வாரிசு” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சரத்குமார் விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று கூறியது மிகப்பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. ரஜினி ரசிகர்கள் பலரும் கொந்தளித்துப்போயினர். அந்த விழாவில் விஜய்யும் அதனை மறுத்து பேசவில்லை என்பதால் இணையத்தில் பல விவாதங்கள் எழுந்தன.

இது குறித்து பல பேட்டிகளில் சரத்குமாரிடம் கேட்கப்பட்டது. அப்போது சரத்குமார், “விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று கூறியதால் ரஜினி சூப்பர் ஸ்டார் இல்லை என ஆகிவிடாது” என்று கூறியிருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட காமெடி நடிகர் மீசை ராஜேந்திரன், விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார்.

ரஜினிதான் சூப்பர் ஸ்டார்

“என்னை பொருத்தவரை ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான். விஜய் சார் இந்த விவகாரத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். விஜய் நடித்த விஷ்ணு படத்தின் பூஜைக்கு ரஜினிகாந்த் வந்திருந்தார். இதே விஜய் சார், அன்று ரஜினி சாரை அந்த விழாவில் எப்படி ஓடிப்போய் அழைத்துக்கொண்டு வந்தார், எப்படி கையைக்கட்டிக்கொண்டு நின்றார் என்பதை நான் கண்கூடாக பார்த்தேன்.

அது போக அந்த விழாவில் அதிக கூட்டம் இருந்தது. அப்போது ரஜினிகாந்தை பார்த்து பலரும் வணக்கம் வைத்தார்கள். ரஜினியும் பதிலுக்கு வணக்கம் வைத்தார்.  வில்லு படத்திற்காக நடைபெற்ற விழாவில் விஜய்க்கு நிறைய பேர் வணக்கம் சொன்னார்கள். ஆனால் விஜய் எந்த பதில் வணக்கமும் வைக்கவில்லை. ஆதலால் என்னை பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் எப்போதும் ரஜினிகாந்த்தான்” என கூறியிருந்தார்.

இதையும் படிங்க: இப்படி நன்றி மறந்துட்டாரே சூரி- போண்டா மணி சொன்ன சோக கதை… அடப்பாவமே!

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.