
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் மாபியா. இதில் போதை கும்பல் தடுப்பு அதிகாரியாக அருண் விஜயும், போதை கடத்தில் தலைவனாக பிரசன்னாவும் நடித்திருந்தனர். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
இந்நிலையில், டிவிட்டரில் ரசிகர் ஒருவர் ‘மாபியா நல்ல இல்லை’ எனப்பதிவிட்டு அதை பிரசன்னாவுக்கு டேக் செய்திருந்தார்.
அதற்கு கோபப்படாமல் கூலாக பதிலடி கொடுத்த பிரசன்னா ‘ எல்லா படங்களும் ‘பிடித்திருக்கிறது’, ‘பிடிக்கவில்லை’ என இரு கருத்துக்களை பெறும். இதில் உங்களுக்கு பிடிக்கவில்லை என்கிற கருத்தை நான் எடுத்துக்கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.






