காட்டுக்குள்ள புகுந்துதான் அவரை பிடிச்சோம்! – ஒரு நடிகருக்காக 5 மாதம் அலைந்த மாரி செல்வராஜ்!..

Published on: April 11, 2023
---Advertisement---

தமிழ் சினிமாவில் புரட்சிகரமான திரைப்படங்கள் எடுக்கக்கூடிய இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். அவரது முதல் படத்தில் துவங்கி அவர் இயக்கிய படங்கள் யாவுமே சமூகத்திற்கு எதாவது ஒரு கருத்தை சொல்லும் விதமாக அமைந்துவிடும்.

அதே போல அவரது திரைப்படங்களில் நாட்டுபுற கிராமிய கலைகள் பற்றிய காட்சிகள் இருப்பதை பார்க்க முடியும். கர்ணன் திரைப்படத்தில் கூட ஒப்பாரியை கொண்டு பாடல் ஒன்று அமைந்திருக்கும்.

அதே போல பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் கதாநாயகனின் தந்தை கூட நாட்டுபுற நடன கலைஞராக இருப்பார். இந்த தந்தை கதாபாத்திரம் குறித்து சில சுவாரஸ்யமான விஷயங்களை மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.

தனது தந்தையின் நிஜ வாழ்க்கையை மையப்படுத்தியே கதாநாயகனின் தந்தை கதாபாத்திரத்தை மாரி செல்வராஜ் உருவாக்கியுள்ளார். கதாபாத்திரத்தை உருவாக்கிய பிறகு அதற்கு தகுந்த நடிகரை தேடி பல இடங்களுக்கு அலைந்துள்ளார் மாரி செல்வராஜ்.

அப்பா கதாபாத்திரத்திற்காக தேடல்:

தெருக்கூத்து ஆடும் நபராக இருக்க வேண்டும். அதே சமயம் மிகவும் அப்பாவியான தோற்றமுடையவராக இருக்க வேண்டும் என்பதே மாரி செல்வராஜின் விருப்பமாக இருந்தது.

5 மாத தேடலுக்கு பிறகுதான் வண்ணாரப்பேட்டை தங்கராஜ் குறித்து மாரி செல்வராஜ் கேள்விப்பட்டுள்ளார். ஆனால் தங்கராஜை பிடிப்பது அவ்வளவு எளிதல்ல. அவர் இரவு நேரங்களில் வெள்ளரிக்காய் காட்டுக்கு காவலுக்கு சென்றுவிடுவார். பகலில் வெள்ளரிக்காய் விற்க சென்றுவிடுவார் என ஊர்க்காரர்கள் கூறியுள்ளனர்.

இதனால் இரவு 12 மணிக்கு அவரை காவல் இருக்கும் காட்டுக்குள் சென்று பிடித்துள்ளனர் படக்குழுவினர். அதன் பிறகு கதையை கூறி அவரை ஒப்புக்கொள்ள வைத்து படத்தில் நடிக்க வைத்தனர். இப்போதும் அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் தனித்துவமானதாகவே இருக்கிறது.

இதையும் படிங்க: மூன்று முதலமைச்சர்கள் ஒன்றாக பணியாற்றிய திரைப்படம்!.. இதெல்லாம் அதிசம்தான்!…

Rajkumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.