Cinema History
லோகேஷ் கனகராஜ் இப்ப பண்ணுனதை நான் அப்பவே பண்ணுனேன்! – சத்யராஜ் சொன்ன அதிர்ச்சி தகவல்!..
தமிழ் சினிமாவில் ப்ளாக் பஸ்டர் திரைப்படங்களை கொடுத்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சத்யராஜ். சத்யராஜ் பெரும் கதாநாயகனாக இருந்த காலக்கட்டத்தில் விஜயகாந்திற்கு போட்டி நடிகராக இருந்தார் சத்யராஜ்.
நகைச்சுவை கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, வில்லனாக நடிக்க வேண்டும் என்றாலும் சரி தனது கதாபாத்திரத்தை மிக சிறப்பாக செய்யக்கூடியவர் சத்யராஜ். தற்சமயம் இவர் தீர்க்கத்தரிசி என்ற படத்தில் நடித்துள்ளார்.
அந்த படம் குறித்து ஒரு பேட்டியில் பேசி கொண்டிருந்தபோது லோகேஷ் கனகராஜின் சினிமா யுனிவர்ஸ் பற்றி அவரிடம் பேசப்பட்டது. அப்போது இந்த சினிமா யுனிவர்ஸ் என்றால் என்ன? என்று புரியாமல் கேட்டார் சத்யராஜ். ஒரு படத்தில் வரும் கதாபாத்திரத்தை இன்னொரு படத்தில் இண்டர் கனெக்ட் செய்வது என அவரிடம் விவரித்துள்ளனர்.
சத்யராஜின் சினிமாட்டிக் யுனிவர்ஸ்:
அப்போது சத்யராஜ் தனது பட அனுபவம் ஒன்றை கூறினார். 1987 இல் சத்யராஜ் மற்றும் சிவாஜி காம்போவில் வெளிவந்து மாஸ் ஹிட் கொடுத்த படம் ஜல்லிக்கட்டு. நீதிபதியான சிவாஜியும், சத்யராஜூம் சேர்ந்து அவர்களது எதிரிகளை பழி வாங்குவதாக கதை செல்லும்.
இதில் ஒவ்வொரு எதிரியை கொல்வதற்கும் சத்யராஜ் ஒவ்வொரு வேஷத்தில் செல்வார். ஏனெனில் வெளி உலகை பொறுத்தவரை அவர் சிவாஜியுடன் ஒரு தீவில் இருக்கிறார் என்றே நம்ப வைக்கப்பட்டிருக்கும். இப்படி சத்யராஜ் போட்டு வரும் வேஷங்கள் யாவும் ஏற்கனவே அவர் நடித்த படங்களில் அவர் போட்ட வேஷங்கள்தான்.
இதை விவரித்த சத்யராஜ் அப்படி என்றால் நான் அப்போது நடித்த ஜல்லிக்கட்டு படம் சினிமாட்டிக் யுனிவர்ஸா என கேட்டுள்ளார். ஆமாம் சார் அதுதான் சார் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என அவருக்கு பதிலளித்துள்ளனர்.
இதையும் படிங்க: பேசாமல் டாக்டர் தொழிலே பண்ணிட்டு போயிருக்கலாம்!.. சினிமாவை நம்பி ஏமாந்த நடிகர்கள்!..