
Cinema News
தமிழ் சினிமாவில் கதாநாயகனான முதல் இயக்குனர்!.. எல்லாத்துக்கும் ஆணிவேரே இவர்தானா!..
Published on
By
தமிழ் சினிமா கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. அதே சமயம் வளர்ச்சியும் அடைந்து வருகிறது. ஹீரோக்களை நம்பி கதை இல்லை என்ற நிலை கூட காலப்போக்கில் மாறக் கூடும். போக போக கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தமிழ் சினிமா மாறுவதற்கும் சாத்தியங்கள் இருக்கலாம். அதுவும் ஒரு விதத்தில் நல்லது தான்.
இயக்குனர்களின் பரிதாப நிலை
ஏனெனில் பெரிய பெரிய மாஸ் ஹீரோக்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தில் 4 படங்களை எடுத்து விடலாம். அந்த சம்பளத்தை படத்திற்கான செலவுகளில் போட்டால் இன்னும் தரமான கதையை நாம் பார்க்க முடியும். மேலும் இப்போது உள்ள டிரெண்ட் என்னவெனில் நடிகர்களை தேடிப் போகும் இயக்குனர்களின் நிலைமை கொஞ்சம் பரிதாபமாகத்தான் இருக்கிறது.
அதாவது அதிக சம்பளம் கேட்டு விரட்டியடித்து விடுகின்றனர். அல்லது சின்ன பட்ஜெட் படமாக இருக்கிறது என்று முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை ஒதுக்கி விடுகின்றனர். இதனால் அந்த இயக்குனர்களே சில சமயங்களில் ஹீரோவாக அவதரித்து விடுகின்றனர்.
சாதனை படைத்த இயக்குனர்கள்
சமீபத்தில் பிரதீப் ரெங்கநாதன், காந்தாரா பட இயக்குனர், ஜெய ஜெய ஜெய ஹே பட இயக்குனர் என இவர்கள் தான் படத்தை இயக்கியும் ஹீரோவாக நடித்தும் படத்தை வெற்றி படமாக ஆக்கியுள்ளனர். மூன்று படங்களின் கதையும் தரமானதாகவும் அதே சமயம் குறைந்த பட்ஜெட்டில் அதிக லாபம் பார்த்த படங்களாகவும் அமைந்தவை.
ஆனால் இதற்கெல்லாம் முதலில் வித்திட்டவர் பழம்பெரும் தயாரிப்பாளரான டி.ஆர்.சுந்தரம். பல படங்களை இயக்கவும் செய்திருக்கிறார். இவரின் இயக்கத்தில் தயாரிக்க இருந்த படம் ‘சுலோச்சனா’. இந்த படத்தில் பி.யு.சின்னப்பா மற்றும் வசந்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தனர்.
டி.ஆர்.சுந்தரத்தின் சமயோகித புத்தி
மறுநாள் படப்பிடிப்பு. ஆனால் பி.யு.சின்னப்பா செட்டிற்கு வரவில்லையாம். வெகு நேரமாகியும் காத்திருந்தும் சின்னப்பா வரவில்லையாம். அப்போது டி.ஆர். சுந்தரம் கோபமாக வெளியே போய் விட்டாராம். அங்கு இருந்த படக்குழுவுக்கு என்ன நடக்க போகிறது என பரபரப்பில் இருந்திருக்கிறார்கள்.
அதன் பின் அந்தப் படத்தில் சின்னப்பா என்ன வேடத்தில் நடிக்க இருந்தாரோ அதே வேடத்தை போட்டுக் கொண்டு செட்டிற்குள் டி.ஆர்.சுந்தரம் வந்தாராம். அப்போது தான் எல்லாருக்கும் தெரிந்ததாம் ‘சின்னப்பா கதாபாத்திரத்தில் டி.ஆர். சுந்தரம் நடிக்க போகிறார்’ என்று. இதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனர்களில் முதன் முறையாக கதாநாயகன் ஆனவர் டி.ஆர். சுந்தரம். இதுபோக தமிழ் சினிமாவில் முதன் முதலில் மிகவும் பிரம்மாண்டமான படங்களை தயாரித்தவரும் டி.ஆர்.சுந்தரம் தான்.இந்த சுவாரஸ்ய செய்தியை சித்ரா லட்சுமணன் தெரிவித்தார்.
Soori: கோலிவுட்டில் பல படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் சூரி. துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த சூரி வெண்ணிலா கபடிக்குழு...
Vijay Devarakonda: கன்னட சினிமாவில் நடிக்க துவங்கி அதன்பின் தெலுங்கு சினிமாவுக்கு சென்று ரசிகர்களிடம் பிரபலமாகி தமிழ், ஹிந்தி என கலக்கி...
STR49 : வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்க ஒரு புதிய படத்தின் வேலைகள் 2 மாதங்களுக்கு முன்பு துவங்கியது. இந்த...
TVK Vijay: கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருப்பவர் விஜய். ஜனநாயகன் படத்திற்கு இவர் வாங்கிய சம்பளம் 225 கோடி...
Vijay: தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது அவர் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்...