Cinema History
எம்.ஜி.ஆருக்கு இன்னொரு பேர் இருக்கு!.. யாருக்காவது தெரியுமா?…
வாழ்வின் அடிமட்டத்திலிருந்து மேலே வந்தவர் நடிகர் எம்.ஜி.ஆர். அவர் சிறுவனாக இருக்கும் போது அப்பா இல்லாததால் அவரின் குடும்பம் வறுமையில் வாடியது. எனவே, அண்ணன் சக்கரபாணியும், எம்.ஜி.ஆரும் சிறு வயதிலேயே நாடகத்திற்கு நடிக்க சென்றனர். அதன்பின் பல வருடங்கள் நாடகங்களில் நடித்தார். அதன்பின் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து ஒருகட்டத்தில் கதாநாயகனாக மாறினார்.
சிவாஜி குடும்ப கதைகளில் நடித்தால் எம்.ஜி.ஆர் சண்டை படங்களில் நடித்தார். ஆக்ஷன் ஹீரோவாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராகவும், சினிமா மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்து தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் மாறினார். மேலும், யார் கஷ்டப்படுவதை பார்த்தாலும் அவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்வார். ஏழை மக்களுக்கும் அள்ளி அள்ளி கொடுத்தார். அதனால்தான் எம்.ஜி.ஆரை மக்கள் வள்ளல் என அழைத்தனர்.
மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரன் என்பதுதான் எம்.ஜி.ஆரின் விரிவாக்கம். அதை சுருக்கி எம்.ஜி.ஆர் என அழைத்தனர். எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானவர்களும், அவரிடம் உரிமையாக பழகுபவர்களும் அவரை ‘ராமச்சந்திரா’ என அழைப்பார்கள். அவரின் அபிமானிகள் அவரை புரட்சி தலைவர், இதயக்கனி, புரட்சி நடிகர், மக்கள் திலகம் என்றெல்லாம் அழைப்பார்கள். ஆனால், எம்.ஜி.ஆரின் வீட்டில் அவருக்கு ஒரு செல்ல பெயர் இருந்தது. அதுதான் ராமு. எம்.ஜி.ஆரின் அம்மா அவரை எப்போதும் ராமு என்றுதான் ஆசையாக அழைப்பாராம்.
அதனால்தான், எம்.ஜி.ஆர் தான் நடித்த பல திரைப்படங்களில் அவரின் கதாபாத்திரத்தின் பெயரை ராமு என வைத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தலைமுடிய கரெக்ட் பண்ணது ஒரு குத்தமா?… முரளியை பங்கமாய் கலாய்த்த பிரபல இயக்குனர்…