விஜய் சேதுபதி முத்தம் கொடுத்ததால் கோபித்துக்கொண்டு கிளம்பிய ஸ்ருதிஹாசன்…

Published on: April 14, 2023
Vijay Sethupathi
---Advertisement---

விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவின் மிகவும் பிசியான நடிகராக வலம் வருகிறார். சமீபத்தில் வெளிவந்த “விடுதலை” திரைப்படத்தின் முதல் பாகத்தில் பெருமாள் வாத்தியாராக மிகச் சிறப்பாக நடித்திருந்தார். தற்போது விஜய் சேதுபதி, “மெர்ரி கிருஸ்துமஸ்”, “காந்தி டாக்ஸ்”, “மும்பைக்கார்”, “ஜவான்” போன்ற ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது விஜய் சேதுபதி கொடுத்த முத்தத்தால் ஸ்ருதிஹாசன் கோபித்துக்கொண்டு படப்பிடிப்பை விட்டு கிளம்பியிருக்கிறார். அது ஏன் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

கடந்த 2021 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “லாபம்”. இத்திரைப்படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே இத்திரைப்படத்தின் இயக்குனரான எஸ்.பி.ஜனநாதன் உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார்.

இத்திரைப்படத்தை படமாக்கியபோது கொரோனா ஊரடங்கில் ஓரளவு தளர்வுகளை அறிவித்திருந்த காலகட்டம். அப்போது பலரும் முகக்கவசம் அணிந்துகொண்டு சமூக இடைவெளியை கடைப்பிடித்து வந்தனர். அந்த சமயத்தில் ஒரு நாள் படப்பிடிப்பின்போது அந்த பகுதியில் இருந்த தனது ரசிகர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அன்பு மழையை பொழிந்துகொண்டிருந்தாராம் விஜய் சேதுபதி.

கொரோனா காலகட்டத்தில் இப்படி அலட்சியமாக விஜய் சேதுபதி நடந்துகொண்டதால் ஸ்ருதிஹாசன் கோபமடைந்துவிட்டாராம். மேலும் அன்று விஜய் சேதுபதியுடன் அருகில் இருப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட இருந்தன. ஆதலால் அந்த நிமிடமே ஸ்ருதிஹாசன் படப்பிடிப்பை விட்டு வெளியே சென்றுவிட்டாராம்.

இதையும் படிங்க: எடிட்டரை போட்டு படாத பாடு படுத்திய ராகவா லாரன்ஸ்… ஒரு படம் ஓடுறதுக்கு என்னென்னலாம் பண்ண வேண்டியதா இருக்கு?

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.