Connect with us
ajith

Cinema News

தன் மனைவிக்காக கண்ணியம் தவறாத அஜித்!.. சொன்ன சொல்லை இன்றளவும் காப்பாற்றி வரும் தல..

இன்று தமிழ் சினிமாவில் பெரிதும் மதிக்கக் கூடிய ஜோடிகளாக கருதப்படுபவர்கள் நடிகர் அஜித் மற்றும் நடிகை ஷாலினிதான். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

அமர்க்களம் படத்தின் போதே ஷாலினி மீது அஜித் காதல் வயப்பட்டார் என பல ஊடகங்களில் செய்திகள் வைரலானது. முதலில் ஷாலினி அமர்க்களம் படத்தில் படிப்பை காரணம் காட்டி மறுத்ததாகவும் பின்னர் அஜித்தே தொலைபேசியில் அழைத்ததால் நடிக்க சம்மதித்ததாகவும் அந்தப் படத்தின் இயக்குனர் சரணே சொல்லியிருக்கிறார்.

ஷாலினியிடம் காதலை தெரிவித்த அஜித்

ஏனெனில் அடிப்படையில் ஷாலினி அஜித்தின் தீவிர ரசிகையாம். படத்தில் நடிக்கும் போதே ஷாலினி மீது ஒரு தலை காதலாக இருந்து வந்துள்ளார் அஜித். அதை ஷாலினியிடம் தெரிவித்த முறைதான் மிகவும் வித்தியாசமானது. அதுவும் இயக்குனர் சரணிடம் ஷாலினி காதுபட ‘சரண் சீக்கிரம் படத்தை எடுத்து முடிங்க,இல்லையென்றால் ஷாலினியை நான் லவ் பண்ணிருவேன் போல’ என்று சொல்லியிருக்கிறார்.

அதை ஷாலினியும் கேட்க வெட்கத்தில் தலை குனிந்தாராம். அதன் பிறகே செய்தி மெல்ல மெல்ல வெளியே தெரிந்தது. ஒரு நாள் அஜித்தின் பிறந்த நாள் சமயத்தில் அஜித்திற்கு மிகவும் பிடித்த பொருள்களை எல்லாம் தெரிந்து வைத்துக் கொண்ட ஷாலினி அவர் பிறந்த நாளின் போது அந்த பொருள்களை எல்லாம் வாங்கி பேக் செய்து இயக்குனர் சரணிடம் ‘இதை அஜித்தின் போட்டிக்கோவில் வைத்து விடுறீங்களா?’ என்று கேட்டாராம்.

ஷாலினியின் கிஃப்ட்

சரணும் காதலுக்கு செய்யும் உதவி என நினைத்து அன்று இரவு அஜித்தின் வீட்டு போட்டிக்கோவில் வைத்து விட்டு ஷாலினியிடம் சொல்லிவிட்டாராம். பிறந்த நாள் அன்று நடு இரவு அஜித்திற்கு போன் செய்து அந்த கிஃப்டை பிரித்து பார்க்க சொல்லியிருக்கிறார். அதில் அஜித்திற்கு பிடித்த பொருள்கள் இருக்க முக்கியமாக குட்டி பைக் ஒன்றும் அதில் இருந்ததாம். அதை பார்த்த அஜித் மிகுந்த எமோஷன் ஆகிவிட்டாராம்.

மேலும் அஜித் அந்த நேரங்களில் சிகரெட் அதிகமாக பிடிப்பாராம். ஒரு சிகரெட்டிலிருந்து மற்றொரு சிகரெட்டை பற்ற வைப்பாராம். இதை கவனித்துக் கொண்டிருந்த ஷாலினியிடம் ‘ஏன் இது உனக்கு பிடிக்காதா’என்று கேட்டாராம். அதற்கு ஷாலினி ‘ நான் சிகரெட் பிடிக்க வேண்டாம் என சொல்லவில்லை, புகை நமக்கு பகை’ என்று சொன்னாராம்.

இதையும் படிங்க : இளையராஜாவை தோண்டுங்க.. எல்லாம் வெளியில வரும்.. கூச்சப்படாமல் சொன்ன வைரமுத்து!..

அதோடு சிகரெட்டை விட்டவர் தானாம் அஜித். இன்று வரை தன் மனைவிக்காக அந்த பழக்கத்தை மறந்து மனைவியின் சொல்லை எப்படி மதிக்கிறார் என்று தெரியும் அளவிற்கு வாழ்ந்து வருகிறார் அஜித்.

google news
Continue Reading

More in Cinema News

To Top