">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
கள்ளக்காதலனுடன் உல்லாசம் : நேரில் பார்த்த கணவன் செய்த வெறிச்செயல்
கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலூர் கிராமத்தில் வசிப்பவர் பிரகாஷ்(34). இவரின் மனைவி பிரியா(27). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியில் கூலித்தொழியாளியாக பணிபுரிபவர் சின்னதுரை. இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.இவருக்கும், பிரியாவுக்கும் கடந்த ஒரு வருடமாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இந்த விவகாரம் பிரகாஷுக்கு தெரியவர மனைவியை கண்டித்துள்ளார். ஆனாலும் அவர் திருந்தவில்லை.
கடந்த 14ம் தேதி காதலர் தினத்தன்று பிரகாஷ் வீட்டிற்கு வந்த போது பிரியா இல்லை. எனவே, சந்தேகமடைந்த பிரகாஷ் சின்னதுரை வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இருவரும் ஒன்றாக உல்லாசம் அனுபவிப்பதை கண்ட அவர் ஆத்திரத்தில் அரிவாளால் இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த பிரியா சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சின்னதுரை ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், இரவோடு இரவாக அங்கிருந்து ஓட்டம் பிடித்துவிட்டார். இதற்கிடையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பிரியா மரணமடைந்தார். எனவே, கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷை கைது செய்தனர்.