விஜயகாந்த் படத்தில் ஏற்பட்ட குளறுபடி!.. பாதியில் விட்டு போன இயக்குனர்.. புனிதராக வந்து காப்பாற்றிய பிரபலம்..

Published on: April 15, 2023
vijay1
---Advertisement---

தமிழ் சினிமாவில் மக்கள் செல்வாக்கு அதிகமாக உள்ள நடிகர்களில் முக்கியமானவர்
நடிகர் விஜயகாந்த். இவருக்கு சாமானிய மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.இன்றளவும் விஜயகாந்த் நம்மிடையே வந்து நேரில் பேசமாட்டாரா? என்று ஏங்கும் அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

vijayakanth
vijayakanth

2000பிறகு வெளிவந்த படங்கள் பெரும்பாலும் செண்டிமெண்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களாகவே அமைந்தன. அதன் காரணமாகவும் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கும் விஜயகாந்தை மிகவும் பிடித்துப் போனது. இந்த நிலையில் விஜயகாந்த் நடித்த ஒரு படத்தை இயக்குவதில் சில பிரச்சினை வர அந்த இயக்குனர்
பாதியிலேயே விட்டுப் போன சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

காளையா என்ற ஹிந்தி படத்தை தமிழில் ரீமேக் செய்து அதில் விஜயகாந்தை நடிக்க வைக்கலாம் என தாணு முடிவு எடுத்திருந்தார். அந்தப் படத்தை கூலிக்காரன் என்ற தலைப்பில் தமிழில் கேப்டன் நடிக்க ராஜசேகர் இயக்க படம் தாறுமாறு வெற்றி. அதன் பிறகு விஜயகாந்தே இன்னொரு படத்தை தயாரிக்க தாணுவிடம் சொல்ல ‘நல்லவன்’ என்ற படத்தை எடுக்க திட்டமிட்டிருக்கிறார் தாணு.

SPMuthuraman
SPMuthuraman

ஆனால் அந்தப் படத்தை உழவன் மகன் பட இயக்குனர் அரவிந்த்ராஜை வைத்து இயக்க அணுகினாராம் தாணு. ஏற்கெனவே அரவிந்த்ராஜ் ஒரு கதையை சொல்ல தாணுவிற்கு பிடிக்கவில்லையாம். அதன் பிறகு தாணு ஒரு கதையை சொல்ல அதற்கு அரவிந்த்ராஜ் ‘இப்போதுதான் இதே கதை வடிவத்தில் உழவன் மகன் படமும் அமைந்திருக்கிறது. மீண்டும் அதை நானே எடுத்தால் நன்றாக இருக்காது’ என்று கூறியிருக்கிறார்.

இதை ஏற்ற தாணு அதன் பின் தான் ‘நல்லவன்’ கதையை சொல்லியிருக்கிறார். ராவுத்தருக்கும் விஜயகாந்திற்கும் கதை மிகவும் பிடித்து விட்டதாம். அரவிந்த்ராஜும் சரி என்று சொல்லிவிட்டாராம். ஆனால் திரைக்கதை, வசனம், பாடல் எல்லாம் அரவிந்த்ராஜே பண்ணிக்கிறேன் என்று சொன்னாராம். கதை மட்டும் தாணுவை பண்ண சொன்னாராம்.

ஆனால் தாணுவோ திரைக்கதையும் நானே பண்ணித்தருகிறேன், ஏனெனில் கலைஞரிடம் பாராட்டை பெறவேண்டும் என்ற எண்ணத்தில் திரைக்கதை நானே பண்ணுகிறேன் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் அரவிந்த்ராஜ் கேட்கமாட்டேன் என்று சொல்லிவிட்டாராம். சரி அந்தப் படத்தில் கடைசி நீதிமன்ற சீன் வரும். அந்த சீன் மட்டும் நான் பண்றேன் என்று தாணு சொன்னாராம். அதற்கும் அரவிந்த்ராஜ் முடியாது என மறுத்துவிட்டாராம்.

இதையும் படிங்க : அந்த சம்பவத்துக்கு பிறகு வாழ்க்கையே வெறுத்துட்டேன்… முதல் படத்துலேயே நொந்து போன பார்த்திபன்!..

இதை கேப்டனிடம் சொல்ல விஜயகாந்தோ ‘அவன் சொல்றத சொல்லட்டும், நாம சூட்டிங்கில் மாற்றிக்கலாம்’ என்று தாணுவிடம் சொல்லிவிட்டாராம். இதற்கிடையில் சத்யராஜின் ‘தாய் நாடு’ என்ற படம் அரவிந்த்ராஜை தேடி வந்திருக்கிறது. அந்தப் படக்கதை அரவிந்த்ராஜின் சொந்தக் கதை என்பதால் விஜயகாந்தை இயக்கும் பொறுப்பை மறுத்து விட்டாராம். அதன் பிறகு எஸ்.பி,முத்துராமன் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த நல்லவன் படத்தை இயக்க முன்வந்தாராம். இந்த சம்பவத்தை நினைவுபடுத்தி கூறுகையில் தக்க சமயத்தில் மனிதரில் புனிதராக வந்தவர்தான் எஸ்.பி,முத்துராமன் என்று கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.