Connect with us
sivaji

Cinema News

‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்திற்கு போட்டியாக கண்ணதாசன் தயாரித்த படம்!.. சிவாஜிக்கே டஃப் கொடுத்த அந்த நடிகர்?..

தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணம், நடிப்புப் பல்கலைக்கழகம் என ஒரு பெரிய ஆளுமையாக வலம் வந்தவர் சிவாஜி கணேசன். தமிழ் சினிமாவின் தலை சிறந்த நடிகராக தோன்றியவர். இன்றைய இளம் தலைமுறை நடிகர்களின் ஒவ்வொருவருக்குள்ளும் சிவாஜியின் தாக்கம் கொஞ்சமாவது இருக்கத்தான் செய்யும்.

தமிழை சரியான முறையில் உச்சரித்து பேசக்கூடிய சிறந்த நடிகர். தன் வெடுக்குத்தனமான நடிப்பாலும் பாவனைகளாலும் அனைவரையும் ஈர்த்தவர். கர்ஜனைக் குரலுக்கு சொந்தக்காரராக விளங்கியவர். அவரது நடிப்பிற்கு தீனிப் போடுகிற அளவுக்கு பல நல்ல கதைகளில் படங்கள் வந்து குவிந்தன.

முதல் படத்திலேயே முத்திரை பதித்த மன்னன் சிவாஜி கணேசன். அவரது நடிப்பை பறை சாற்றும் வகையில் பணம், மனோகரா, இல்லற ஜோதி, பாசமலர், வீரபாண்டிய கட்டபொம்மன், பச்சை விளக்கு, மோட்டார் சுந்தரம் பிள்ளை போன்ற படங்கள் அவரது நடிப்பை விவரிக்கும் படங்களாக அமைந்தன.

50களில் ஆரம்பித்த அவரது திரைப்பயணம் இன்றைய தலைமுறை நடிகர்களோடும் தொடர்ந்தது. குணச்சித்திர வேடங்களில் விஜயுடன் லவ் டுடே, முரளியுடன் வீரத்தாலாட்டு, ரஜினியுடன் படையப்பா , கமலுடன் தேவர் மகன் என அனைத்து முன்னனி நடிகர்களுடனும் நடித்தார்.

இந்த நிலையில் சிவாஜியின் படங்களில் மிகவும் பேசப்பட்ட படம் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படம். இந்த படத்தை பற்றி ரசிகர் ஒருவர் சித்ரா லட்சுமணனிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார். அதாவது ‘எம்ஜிஆர் நடிக்க இருந்த ஊமைக் கோட்டம் திரைப்படம் தான் எஸ்.எஸ்.ஆர் நடித்த சிவகங்கை சீமனாக மாறியது. சிவகங்கை சீமை திரைப்படத்தில் சிவாஜி நடித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என கருதுகிறேன், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்று கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த சித்ரா லட்சுமணன் ‘அந்த காலத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு போட்டியாக கண்ணதாசன் தயாரித்த படமாகத்தான் சிவகங்கை சீமன் படம் அமைந்தது என பல நாளிதழ்களில் செய்திகள் பரவியது. அப்படி இருக்க அந்த படத்தில் எப்படி சிவாஜி நடித்திருக்க முடியும்?’ என்று கூறினார்.

இதையும் படிங்க : இந்த வசனத்தை பேசமாட்டேன்- ஒன்றரை மணி நேரம் வாக்குவாதம் செய்த ரஜினிகாந்த்… அப்படி என்னவா இருக்கும்!

Continue Reading

More in Cinema News

To Top