இது நியாயமா?…திரிஷாவை நம்பி தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்….

Published on: February 25, 2020
---Advertisement---

74136997fc0ed39dc72e7f84f32df83b

நடிகை திரிஷா மருத்துவராக நடித்துள்ள திரைப்படம் பரமபதம் விளையாட்டு. இப்படத்தை 24 ஹவர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை திருஞானம்  என்பவர் இயக்கியுள்ளார் இப்படம் வருகிற 28ம் தேதி வெளியாகவுள்ளது. ப்படத்தின் புரமோஷன் விழா சமீபத்தில் சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. இந்த விழாவில் திரிஷா கலந்து கொள்ளவில்லை. 

இது படக்குழுவினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்த விழாவில் பேசிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகி டி.சிவா ‘இந்த விழாவுக்கு திரிஷா வரவில்லையென்பது வருத்தத்திற்குரிய விஷயம். தொடர்ந்து அவர் விளம்பரத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை தயாரிப்பாளருக்கு திருப்பித்தர வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக எச்சரிக்கை விடுக்கிறேன் என்றார்’ என பேசியிருந்தார்.

da3512a12198b0d41a4515249dd6f717

இந்த விவகாரம் திரிஷா தரப்புக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் திரிஷாவின் தாய் ஒரு ஆடியோவை வெளியிட்டிருந்தார். அதில் என் பொண்ணு திரிஷா பிசியாக இருக்கிறார். தொடர்ந்து பல பட வேலைகளில் மூழ்கியுள்ளார். அதனால் அவர முடியவிலை. அவர் பெயரை கெடுக்கும் விதத்தில் நடந்து கொண்டால் படத்தையே காலி செய்து விடுவேன். ஒரு டிவிட் போட்டால் போதும்’ என தயாரிப்பாளரை மிரட்டும் தொனியில் பேசிய ஆடியோவும் வெளியானது.

அதோடு, இப்படத்தை தெலுங்கில் வெளியிடும் பணி நடந்து முடிந்து, ஒரு தயாரிப்பாளர் ஒரு குறிப்பிட்ட தொகையை 24 ஹவர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திடம் முன்பணமாக கொடுத்துள்ளார். ஆனால், சென்னையில் நடைபெற்ற புரமோஷன் விழாவிலேயே கலந்து கொள்ளாத திரிஷா எப்படி ஆந்திராவில் நடக்கும் புரமோஷனுக்கு வருவார் என கலக்கம் அடைந்த அவர், தற்போது கொடுத்த அட்வான்ஸை திரும்ப கேட்டு வருகிறாராம். 

9e933fefaa3cf70b6e10042ccdffaf04

இது திரிஷாவை நம்பி படம் எடுத்த 24 ஹவர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கும் மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாம். இத்தனைக்கும் பேசிய ஒரு கோடி சம்பளத்தில் ரூ.95 லட்சத்தை திரிஷா பெற்றுக்கொண்டாராம். மீது 5 லட்சம் மட்டுமே பாக்கி இருக்கிறது என தயாரிப்பு தரப்பு கூறுகிறது.

இப்படி செய்யலாமா திரிஷா?… இது நியாயமா?…

Leave a Comment