Connect with us
senthil

Cinema News

நாடகத்தில் அந்த வேடத்தில் கவுண்டமணி அசத்தலாக நடிப்பார்!.. செந்தில் சொன்ன ரகசியம்!…

நடிகர் கவுண்டமணி கோவையை சேர்ந்தவர். இவர் பல திரைப்படங்களில் நடித்து ஒரு கட்டத்தில் முன்னணி கதாநாயகனாக மாறியவர். லாரன், ஹார்டியை போல் கவுண்மணி – செந்தில் இருவரையும் திரையில் பார்த்தாலே ரசிகர்கள் சிரிக்க துவங்கிவிடுவார்கள். பல நூறு படங்களில் இருவரும் சேர்ந்து நடித்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளார்கள்.

ஒருகட்டத்தில் கவுண்டமணி காமெடிக்காகவே பல படங்களும் ஓடியது. அவர் சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்ட பிறகுதான் விவேக், வடிவேலு போன்றவர்கள் அதிகமான படங்களில் நடிக்க துவங்கினர். அவர் விட்ட இடத்தைதான் அவர்கள் இருவரும் பிடித்தனர். சத்தியராஜ், பிரபு, கார்த்திக், சரத்குமார், ரஜினி ஆகிய பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து கவுண்டமணி காமெடி செய்துள்ளார்.

ஆனால், சினிமாவுக்கு வருவதற்கு முன் நாடகங்களில் கவுண்டமணி நடித்தது பலருக்கும் தெரியாது. அப்போதெல்லாம் ஊர் ஊராக சென்று நாடகம் போடுவார்கள். அதில் ஒரு நாடக குரூப்பில்தான் கவுண்டமணி நடித்து வந்தார். இதில், ஆச்சர்ய தகவல் என்னவெனில் செந்திலும் அவருடன் பல நாடகங்களில் நடித்துள்ளார்.

இதுபற்றி ஒரு பேட்டியில் கூறியுள்ள நடிகர் செந்தில் ‘சினிமாவுக்கு வருவதற்கு முன் கவுண்டமணி அண்ணனோடு இணைந்து பல நாடகங்களில் நடித்துள்ளேன். சினிமா மாதிரி இல்லாமல் நாடகத்தில் விதவிதமான வேடங்களில் கவுண்டமணி நடிப்பார். குறிப்பாக வில்லன் வேடத்தில் அவர் சிறப்பாக நடிப்பார். அவர் வில்லனாக நடித்தால் எல்லாருமே பாராட்டுவார்கள். அந்த அளவுக்கு நடிப்பை கொடுப்பார்’ என செந்தில் கூறியுள்ளார்.

திரைப்படங்களில் காமெடி மட்டுமில்லாமல் குணச்சித்திரம், ஹீரோ மற்றும் வில்லனாகவும் பல படங்களில் கவுண்டமணி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in Cinema News

To Top