அப்போலோவில் ஜெ.வின் கடைசி நிமிடங்கள் : அப்பட்டமாய் விவரிக்கும் ‘பரமபதம் விளையாட்டு’ ஸ்னீக் பீக் வீடியோ

Published on: February 25, 2020
---Advertisement---

1e7178e2f09444312f948c209eb61114-2

இப்படத்தில் கட்சி தலைவர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுய நினைவை இழக்கிறார்.  அவரை சுற்றி என்னென்ன அரசியல் நிகழ்வுகள் நடக்கிறது என்பது திரைக்கதையாக விவரிக்கப்பட்டுள்ளது.

அந்த கட்சி தலைவருக்கு திரிஷா சிகிச்சை அளிக்கிறார். அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் வார்டில் எந்த நோயாளியும் இருக்கக் கூடாது. சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட வேண்டும் என அரசியல்வாதி மருத்துவமனை நிர்வாகத்துக்கு உத்தரவிடுகிறார். ஆனால், அதை திரிஷா எதிர்க்கிறார். இந்த காட்சிகள் ஸ்னீக் பீக் வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

8289f4c7e5e74d8f2e191454ae36805f

அதன்பின் அந்த அரசியல்வாதியால் திரிஷாவுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. இதை அவர் எப்படி சமாளித்தார். அந்த அரசியல் கட்சி தலைவர் பிழைத்தாரா என்பதை படம் விவரிக்கிறது.

இதை படிக்கும் போது மறைந்த ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருந்த போது நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வருகிறது. இதை மனதில் வைத்துதான் அந்த காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது புரிகிறது. தமிழக அரசியலையே புரட்டிப்போட்ட இந்த சம்பவங்களை பரமபதம் விளையாட்டு படக்குழு தைரியமாக திரைப்படமாக எடுத்துள்ளது.

எனவே, இந்த ஸ்னீக் பீக் வீடியோ ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.

Leave a Comment