விஜயகாந்தை நிஜப்பெயரில் கூப்பிடும் ஒரே ஆள் யார் தெரியுமா?… நீங்க நினைக்குற மாதிரி இல்ல!..

Published on: April 18, 2023
vijayakanth
---Advertisement---

சினிமா ஆசையில் மதுரையிலிருந்து சென்னை வந்து வாய்ப்பு தேடி அலைந்து போராடி வாய்ப்புகளை பெற்று, சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின் ஹீரோவாக மாறியவர் விஜயகாந்த். துவக்கத்தில் வில்லனாக கூட நடித்தவர் ஒரு கட்டத்தில் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறினார். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கினார்.

Actor Vijayakanth
Actor Vijayakanth

எம்.ஜி.ஆர் படங்களையும், ரஜினி படங்களையும் பார்த்துதான் விஜயகாந்த் சினிமாவுக்கு வந்தார். ஒருகட்டத்தில் ரஜினிக்கே பெரிய போட்டியாகவும் மாறினார். தமிழ் நாட்டின் பல குக்கிராமங்களில் கூட விஜயகாந்துக்கு ரசிகர் மன்றங்கள் உருவானது. அப்படித்தான் விஜயகாந்த் வளர்ந்தார்.

விஜயகாந்த் பிறந்த போது அவருக்கு அவரின் பெற்றோர் வைத்த பெயர் நாராயணசாமி நாயுடு. ஆனால், அது அவரின் தாத்தா பெயர் என்பதால் அந்த பெயரில் அவரை அழைக்க முடியாது என்பதால் விஜயராஜ் என குடும்பத்தினர் அழைத்தனர். ரஜினிகாந்தை மனதில் வைத்து சினிமாவுக்காக விஜயகாந்த் என மாற்றிக்கொண்டார்.

விஜயகாந்தை ‘நாராயணசாமி’ என அழைப்பவர் அவரின் அக்கா விஜயலட்சுமி மட்டுமே. அக்கா மீது மிகுந்த பாசம் கொண்டவர் விஜயகாந்த். விஜயலட்சுமி ஒரு மருத்துவரும் கூட. அம்மா இறந்தபின் தம்பி விஜயகாந்தை பாசத்துடன் பார்த்துக்கொண்டவர் அவர். அவர் என்ன சொன்னாலும் விஜயகாந்த் தட்டமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.