‘அமர்க்களம்’ படத்தின் மூலம் அஜித் செய்த பெரிய சாதனை!.. இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!..

Published on: April 20, 2023
ajith
---Advertisement---

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் அஜித்தின் பிறந்த நாள் வரும் மே 1 ஆம் தேதி ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்படும். ஆனால் அதற்கு எந்தவித நன்றியும் தெரிவிக்காத போதிலும் அஜித் மீது இந்த அளவுக்கு வெறிகொண்டு இருக்கும் ரசிகர்களை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் திரையுலகில் ஆச்சரியத்தை தான் ஏற்படுத்துகிறது.

சாதாரணமாக சினிமாவிற்குள் வந்தவர் கிடைத்த கதைகளில் நடித்துக் கொண்டிருந்தார். வான்மதி படம் தான் அவரை தமிழ் சினிமாவிற்குள் அழைத்துக் கொண்டு வந்தது. தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் சொல்லும்படியாக எந்த படங்களும் அவருக்கு வரவேற்பை தரவில்லை.

அதன் பின்னர் தான் காதல் கோட்டை, காதல் மன்னன் போன்ற படங்கள் சொர்க்க வாசலை அஜித்திற்காக திறந்தது. அந்த இரு படங்களும் வெளியானதில் இருந்து யாருப்பா இந்த ஆணழகன் என்று பிரமிக்கும் வகையில் இவரின் அழகும் நடிப்பும் இருந்தது.

அதனை தொடர்ந்து வந்த வாய்ப்பு தான் ‘அமர்க்களம்’. அமர்க்களம் படத்தில் ஒரு பக்கா ரௌடியாக வந்து கலக்கியிருப்பார் அஜித். அந்த ரௌடித்தனத்திலும் ஒளிந்திருக்கும் காதலை அழகாக வெளிக்காட்டியிருப்பார். இந்தப் படத்தை சரண் தான் இயக்கியிருந்தார். இதற்கு முன் காதல் மன்னன் படமும் சரண் தான் இயக்கினார்.

அந்த நட்புதான் இவர்களை மீண்டும் அமர்க்களம் படத்தில் இணைத்தது. அதுமட்டுமில்லாமல் ஷாலினியுடனான காதலும் இந்தப் படத்தின் மூலம் தான் மலர்ந்தது. இப்படி சுவாரஸ்யமான சம்பவங்கள் அமர்க்களம் படத்தின் மூலம் நிகழ்ந்த நேரத்தில் இன்னும் மற்றுமொரு ஆச்சரியமான சம்பவமும் நடந்திருக்கிறது.

இந்தப் படத்தின் மாபெரும் வெற்றி, அதில் அஜித்தின் ஸ்டைலான லுக் என மொத்தமாக ரசிகர்களை அஜித் கவர்ந்தார். இந்த ஒரு படத்தின் மூலமாக ஒரே நேரத்தில் 25000 மன்றங்களை ஆரம்பித்து ரசிகர்கள் அஜித்தை ஆச்சரியத்தில் உறைய வைத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க : நைட் 1 மணிக்கு எனக்காக இதை செய்யுங்க சார்..! அஜித் மனைவிக்காக இயக்குனர் செய்த வேலை…

ரசிகர் மன்றமே வேண்டாம் என சொன்னாலும் இந்த ஒரு சம்பவம் திரையுலகை மிகவும் பிரமிக்க வைத்திருந்தது என பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.