Connect with us

Cinema History

கல்யாணம் பண்றது என் இஷ்டம், உங்களுக்கென்ன… எம்.ஜி.ஆரை கடுப்பேத்திய வாலி..!

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக பெரும் மரியாதைக்குட்பட்ட ஒரு நடிகராகவும் தலைவராகவும் இருந்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர் இருந்த காலகட்டங்களில் சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு எந்த ஒரு பிரச்சனை என்றாலும் அவர்கள் முதலில் அணுகும் நபராக எம்.ஜி.ஆர் இருந்தார்.

மேலும் ஒரு தலைவர் என்பதையும் தாண்டி எம்.ஜி.ஆர் சக நடிகர்களுடனும் ஊழியர்களுடனும் மிகவும் சகஜமாக பழகக் கூடியவர். அதேசமயம் சின்ன சின்ன விஷயங்களுக்கு சட்டென்று கோவப்படும் மனநிலையை கொண்டவர் எம்.ஜி.ஆர்.

எனவே அவருடன் பழகுபவர்கள் எப்போதும் மிகவும் கவனமாகவே அவரிடம் பேச்சை துவங்குவார்கள். ஏனெனில் விளையாட்டிற்காக பேசும் சில விஷயங்களுக்காக கூட எம்.ஜி.ஆர் கோபப்பட்டது உண்டு. நடிகர் எம்.ஆர் ராதா, சந்திரபாபு போன்ற நடிகர்களுடன் எம்.ஜி.ஆருக்கு மனக்கசப்பு இருந்ததற்கு இந்த மாதிரியான நகைச்சுவை பேச்சுக்களே காரணங்களாக அமைந்தன.

அந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆருடன் நல்ல நண்பராக இருந்தவர் கவிஞர் வாலி. அப்போது எம்ஜிஆர் நடித்த சில படங்களுக்கு கவிஞர் வாலி பாடல்களை எழுதியிருந்தார்.

இருவருக்குமிடையே ஏற்பட்ட சண்டை:

வாலி தன்னுடைய நெருங்கிய நண்பர் என்பதால் அவர் திருமணம் செய்யும்போது அந்த விஷயத்தை கண்டிப்பாக தன்னிடம் சொல்ல வேண்டும். நான் தான் அந்த திருமணத்தை நடத்தி வைப்பேன் என உரிமையாக கூறியிருந்தார் எம்.ஜி.ஆர். ஆனால் திருமணம் செய்யும்போது அந்த விஷயத்தை மறந்து வாலி எம்.ஜி.ஆரை அழைக்காமலேயே தன்னுடைய திருமணத்தை நடத்தி முடித்தார்.

இதனால் எம்.ஜி.ஆருக்கு வாலி மீது பெரும் அதிருப்தி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இருவருக்கும் பேச்சுவார்த்தையே இல்லாமல் போனது. திருமணம் செய்வது நம்முடைய தனிப்பட்ட உரிமை அதற்காக எதற்கு எம்.ஜி.ஆரிடம் அனுமதி கேட்க வேண்டும் என்று வாலியும் வீம்பாக எம்.ஜி.ஆரிடம் பேசாமலே இருந்தார்.

1965 இல் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான திரைப்படம் தாழம்பூ. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் சென்று கொண்டிருந்த பொழுது இந்த படத்திற்கு பாடல் வரிகளை வாலி எழுதினால்தான் நன்றாக இருக்கும் என்று பரவலாக பேச்சு இருந்தது.

எனவே எம் ஜி ஆரும் நடந்த விஷயங்களை மறந்து வாலியை அழைத்தார். அப்போது அங்கு வந்த வாலி நடந்த பழைய விஷயங்களை மறந்து விடுங்கள் வழக்கம் போல சகஜமாக இருப்போம் எனக் கூறியுள்ளார்.

அதன் பிறகு அவர்கள் இருவரும் மீண்டும் பழையப்படி நட்பாகி விட்டனர் இந்த விஷயத்தை ஒரு பேட்டியில் கவிஞர் வாலி பகிர்ந்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top