Cinema History
கீழ இறங்குனா உயிருக்கு உத்திரவாதம் இல்ல!.. நெல்லையில் கார்த்திக்கை துரத்திய ரசிகர்கள்…
தமிழ் சினிமாவில் 1981 ஆம் ஆண்டு அலைகள் ஓய்வதில்லை என்கிற திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகர் கார்த்திக். முதல் படத்தில் இருந்து கார்த்திக் நடிக்கும் அனைத்து படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வந்தது.
அவர் நடித்த திரைப்படங்களில் கிழக்கு வாசல்,தெய்வவாக்கு, பாண்டி நாட்டு தங்கம் போன்ற பல படங்கள் மிகவும் பிரபலமாக வெற்றி பெற்ற படங்களாகும்.
எனவே அப்போதைய காலகட்டத்தில் நடிகர் கார்த்திக்கிற்கு மிகப்பெரும் ரசிக்கப்பட்டாளம் இருந்தது. அப்போது ஒரு முறை பத்திரிக்கையில் பிரபல எழுத்தாளர் சுஜாதா எழுதும் பொழுது ரஜினி கமலுக்கு பிறகு ஒரு பெரிய ஹீரோ என்றால் அது கார்த்திக்தான் என எழுதி இருந்தார் அந்த அளவிற்கு அப்போது கார்த்திக் பிரபலமான ஒரு நட்சத்திரமாக இருந்தார்.
1990 காலகட்டத்தில் நடிகர் கார்த்திக் ரசிகராக இருந்த திருநெல்வேலிக்காரர் கார்த்திக் தாலி எடுத்துக் கொடுத்தால்தான் நான் திருமணம் செய்வேன் எனக்கூறி மிகவும் விடாப்படியாக இருந்துள்ளார் இந்த விஷயம் எப்படியோ கார்த்திக்கு தெரிய அவர் நான் திருநெல்வேலிக்கு வர முடியாது எனவே அவர்களை சென்னைக்கு வர செய்யுங்கள் நாம் திருமணத்தை நடத்தலாம் என கூறியிருக்கிறார்.
அதன் பிறகு அந்த ரசிகர் கார்த்திக் திருநெல்வேலிக்கு வர வேண்டும் என விடாப்பிடியாக இருந்ததால் கார்த்திக்கும் திருநெல்வேலிக்கு சென்றுள்ளார் திருநெல்வேலிக்கு செல்லும் வழியிலேயே ஒரு பெரும் மக்கள் கூட்டம் அவரை மறைத்துள்ளது. அவர்கள் அனைவரும் கார்த்தியின் மிகப்பெரும் ரசிகர்கள் காரை விட்டு வெளியில் சென்றால் கண்டிப்பாக கார்த்திக்கு அது பெரும் பிரச்சனைதான் என காரை எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர்.
மாப்பிள்ளை வீட்டாரை சந்தித்து திருமணத்தை முடித்துவிட்டு கிள்மபியுள்ளார் கார்த்திக். அப்போது காருக்கு பின்னால் பைக்கில் சிலர் கார்த்தியை பிரிந்து தொடர்ந்தவாறு வந்துள்ளனர். பிறகு இதையெல்லாம் பார்த்த கார்த்திக், அவரே கீழே இறங்கி அவர்களிடம் சமாதானம் பேசிவிட்டு திரும்ப சென்னைக்கு சென்றுள்ளார்.
இதையும் படிங்க: பாபநாசம் படத்தில் ரஜினி!… சூப்பர் ஸ்டாரே ஆசைப்பட்டும் நடக்கலை… ஏன் தெரியுமா?