
Cinema News
சூட்டிங்னு போனா அங்க துப்பாக்கி சூடு நடக்குது!..- படப்பிடிப்பில் விஜயகாந்திற்கு நடந்த அசாம்பாவிதம்…
Published on
By
திரைத் துறையில் உள்ள ஊழியர்களால் அதிகமாக பாராட்டப்படும் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் விஜயகாந்த். திரை உலகில் உள்ள ஊழியர்களுக்கு அதிகமாக நன்மைகளை செய்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆருக்கு பிறகு அதே போல திரைத்துறையினருக்கு நன்மைகளை செய்த ஒருவராக விஜயகாந்த் இருக்கிறார்.
ஆரம்ப காலங்களில் மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவிற்கு வந்தவர் விஜயகாந்த். அவர் சினிமாவிற்கு வந்த கால கட்டங்களில் சாப்பாடு முதல் அனைத்திற்கும் மிகவும் கஷ்டப்பட்டார். எனவே அதே நிலை மற்ற ஊழியர்களுக்கு ஏற்படக்கூடாது என்பதற்காகவே சினிமாவில் வந்த பிறகு பல நன்மைகளை செய்ய தொடங்கினார்.
அதில் முக்கியமான ஒன்று அவர் நடிக்கும் திரைப்படங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு முழு விருந்து சாப்பாடு போடுவார் விஜயகாந்த் முக்கியமாக அதே உணவைதான் அவரும் சாப்பிடுவார். பொதுவாக கதாநாயகர்கள் தங்களுக்கு என தனி உணவை வரவழைத்து சாப்பிடுவதை தான் பழக்கமாக வைத்திருந்தனர் அதிலிருந்து வழக்கத்தை மாற்றியவராக விஜயகாந்த் இருக்கிறார்.
விஜயகாந்திற்கு நடந்த சம்பவம்:
சினிமாவில் இருந்த காலகட்டத்திலேயே விஜயகாந்திற்கு அரசியல் மீது ஆர்வம் இருந்தது 1990 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடித்த சத்ரியன் என்கிற திரைப்படம் வெளியானது.
இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக விஜயகாந்த் தனுஷ்கோடிக்கு சென்று இருந்தார். அப்போது படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளது ஏன் இப்படி சத்தம் கேட்கிறது என அதிர்ச்சியாக அனைவரும் திரும்பி பார்க்கும் பொழுது அவர்கள் கண் முன்னே இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்றுள்ளனர்.
இந்த நிகழ்வை பார்த்ததும் விஜயகாந்துக்கு மிக அதிர்ச்சியாக ஆகியுள்ளது. பிறகு அரசியலுக்கு வந்த விஜயகாந்த் இந்த விஷயம் மிகவும் மோசமானது என கூறி இந்த அனுபவத்தையும் பகிர்ந்து இருந்தார்.
இதையும் படிங்க: கீழ இறங்குனா உயிருக்கு உத்திரவாதம் இல்ல!.. நெல்லையில் கார்த்திக்கை துரத்திய ரசிகர்கள்…
ரங்கராஜ் முகத்திரை கிழிப்பு : மாதம்பட்டி ரங்கராஜ் சினிமா ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசல்டா என்பவரை ஆசை வார்தத்தை கூறி ஏமாற்றி...
தீயாய் வேலை செய்யும் விஜய் : விஜய் பேச்சில் ஏற்பட்ட தடுமாற்றம் : விஜயின் பேச்சு பல விமர்சனங்களை சந்தித்தாலும் இன்று...
சினிமா நடிகர் பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜி மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூத்த பத்திரிக்கையாளர் சேகுவேரா கூறி...
Vijay TVK: திருச்சியில் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்த விஜய் இன்று நாமக்கல் , கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த...
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் பாரதிராஜா. தன்னுடைய படங்களில் புதுமை புகுத்தி அதுவரை வந்து கொண்டிருந்த படங்களிலிருந்து...