Cinema History
அந்த விஷயத்தை மாத்த சொன்னா, செம கடுப்பாயிடுவார் எம்.ஜி.ஆர்..! வார்னிங் கொடுத்த வாலி!..
தமிழ் சினிமாவில் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி ஒரு மிகப்பெரும் ஆளுமையாக இருந்தவர் நடிகர் எம்.ஜி.ஆர். அப்போதைய காலகட்டத்தில் சினிமாவில் மிகப்பெரும் கமர்சியல் ஹீரோவாக இருந்தவர் எம்.ஜி.ஆர்.
அதையும் தாண்டி தமிழ் சினிமாவை தனது கண்ணசைவில் வைத்திருந்தார். எம்.ஜி.ஆர். இப்போதைய காலகட்டத்தில் பொதுவாக இயக்குனர்கள் திரைப்படம் இயக்கும்போது அதில் ஹீரோக்கள் பெரிதாக எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய இயக்குனர்கள் அனுமதிப்பதில்லை.
கபாலி படத்தை இயக்கும்போது பா.ரஞ்சித் கூட ரஜினியின் குறுக்கீடு இல்லாமலே அந்த படத்தை எடுத்து கொடுத்தார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கும்போதும் அதில் விஜய் குறுக்கிடவில்லை.
ஆனால் எம்.ஜி.ஆரை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கும்போது அந்தப் படத்தின் காட்சிகள் முதல் பாடல்கள் வரை எந்த ஒரு மாற்றத்தையும் எம்.ஜி.ஆர் நினைத்தால் செய்ய முடியும் என்கிற நிலை இருந்தது.
எம்.ஜி.ஆரின் குறுக்கீடு:
முக்கியமாக பட பாடல்களை பொறுத்தவரை எம்.ஜி.ஆர் சொல்லும் பாடல் வரிகளுக்கு ஏற்றார் போல பாடல்களுக்கு இசை அமைக்க வேண்டும் என்பதே இசையமைப்பாளர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது.
எம்ஜிஆருடன் பணிபுரிந்த நபர்களில் முக்கியமானவர் கவிஞர் வாலி. அவர் எம்.ஜி.ஆர் குறித்து கூறும் போது பாடலுக்கு வரிகளை எம்.ஜி.ஆர் எழுதி கொடுத்து அதற்கு ஏற்றார் போல இசையமைக்க சொல்வார்.
ஆனால் பாடல் வரிகளுக்கு ஏற்ற பாடலை இசை அமைக்க முடியவில்லை எனவே பாடல் வரிகளை மாற்றி அமைக்கலாம் என இசையமைப்பாளர் கூறினால உடனே தயாரிப்பாளரிடம் பேசி அந்த இசையமைப்பாளரையே மாற்றி விடுவார் எம்.ஜி.ஆர் அந்த அளவிற்கு பாடல் வரிகளின் மீது மிகவும் கவனம் செலுத்தக்கூடியவர் எம்.ஜி.ஆர் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார் வாலி.