Cinema History
கோபத்தில் கத்திய இயக்குனர்!.. அதிர்ந்து போன ரஜினி!.. அட இவரா இப்படி?!…
தமிழ் சினிமாவில் மாஸ் ஹிட் கொடுக்கும் கதாநாயகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த் அளவிற்கு இவ்வளவு காலம் ஹீரோவாக மட்டுமே நடித்துக் கொண்டிருந்த நடிகர்கள் வேறு யாரும் கிடையாது.
சிவாஜி கணேசன் மாதிரியான பெரும் நடிகர்கள் கூட ஒரு காலத்திற்கு பிறகு ஹீரோவாக நடிப்பதை விட்டு துணை கதாபாத்திரங்களில் நடித்த தொடங்கினர். ரஜினிக்கு பிறகு அதிக காலம் சினிமாவில் ஹீரோவாக வலம் வரும் ஒரு நடிகராக கமல்ஹாசன் இருந்து வருகிறார்.
ரஜினியின் சினிமா வாழ்க்கையில் அவருக்கு மிகப் பெரும் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் பாட்ஷா. பாட்ஷா திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. சுரேஷ் கிருஷ்ணா ரஜினிகாந்த் காம்போவில் மொத்தம் நான்கு படங்கள் வந்துள்ளன அண்ணாமலை, பாட்ஷா, வீரா, பாபா ஆகிய நான்கு படங்கள் வந்துள்ளன. இதில் பாபாவை தவிர்த்து மற்ற மூன்று படங்களுமே நல்ல ஹிட் கொடுத்த படங்கள்.
திரைப்படத்தில் நடந்த சம்பவம்:
ரஜினிகாந்துடன் இத்தனை படங்களில் வேலை பார்த்திருப்பதால் அதுக்குறித்து பல சுவாரசிய அனுபவங்களை கொண்டுள்ளார் சுரேஷ் கிருஷ்ணா.
வீரா திரைப்படத்தை இயக்கும் பொழுது அதில் ரோஜா ரஜினிகாந்த் முகத்தை கோலமாக வரைவது போன்ற ஒரு காட்சி இடம் பெறும். அந்த காட்சிக்காக படம் வரையும் ஓவியர்களை அழைத்து வந்து ரஜினியின் முகத்தை கோலமாவு கொண்டு வரைந்து வைத்திருந்தார் சுரேஷ் கிருஷ்ணா. அந்த மாவின் மீது ஏதாவது ஒரு பொருள் பட்டாலும் அந்த கோலம் அழிந்துவிடும் எனவே அதை பார்த்துக் கொள்ள இருவரை நிற்க வைத்து விட்டு சென்றார் இயக்குனர்.
கோபமடைந்த இயக்குனர்:
பொதுவாக சுரேஷ் கிருஷ்ணா கோபமே பட மாட்டார் ஆனால் அன்று யாரோ ஒருவர் கோலத்தின் ஒரு பகுதியை மிதித்து விட்டனர். அதை வந்து பார்த்த சுரேஷ் கிருஷ்ணா கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார். கோபமானதோடு இல்லாமல் அங்கு பணிபுரிந்த அனைவரையும் திட்ட தொடங்கிவிட்டார் அப்பொழுது ரஜினிகாந்த் அங்கே தான் இருந்தார்.
இதுவரை சுரேஷ் கிருஷ்ணா கோபப்பட்டு பார்த்ததே இல்லை என்பதால் ரஜினிகாந்துக்கு சுரேஷ் கிருஷ்ணாவின் கோபம் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது அதன்பிறகு சுரேஷ் கிருஷ்ணாவை அழைத்து அமைதிப்படுத்தி மீண்டும் ஓவியரை வரவழைத்து அந்த ஓவியத்தை வரைந்து முடித்தனர். அதற்கு முன்பு சுரேஷ் கிருஷ்ணா பல படங்களை இயக்கி இருந்தாலும் அவரை கோபப்படுத்திய ஒரே நிகழ்வு இந்த படப்பிடிப்பில்தான் நடந்தது.