Cinema History
விமானத்தில் இருந்து போஸ்டர்களை தூக்கி எறிந்த எம்.ஜி.ஆர் பட தயாரிப்பாளர்… இப்படி ஒரு புரொமோஷனா?
தமிழ் சினிமா தற்போது நவீன தொழில்நுட்பங்களின் துணையோடு உலகளவில் உள்ள மக்களிடம் சென்று சேர்ந்துள்ளது. அந்தளவுக்கு மிகவும் பிரம்மாண்டமாக புரொமோஷன் பணிகள் நடைபெறுகிறது. ஆனால் அக்காலகட்டத்தில் சினிமா போஸ்டர்களை தவிர புரொமோஷன் செய்வதற்கு வேறு எந்த வழியும் இல்லை. எனினும் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த காலகட்டத்தில் ஒரு திரைப்படத்திற்காக வானத்தில் இருந்து புரோமோஷன் செய்திருக்கிறார் ஒரு தயாரிப்பாளர். அத்தயாரிப்பாளர் யார்? அது என்ன திரைப்படம்? என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
1949 ஆம் ஆண்டு பி.யு.சின்னப்பா கதாநாயகனாக நடிக்க எம்.ஜி.ஆர், பானுமதி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “ரத்னகுமார்”. இத்திரைப்படத்தை கிருஷ்ணன்-பஞ்சு ஆகியோர் இயக்கியிருந்தனர். முருகன் டாக்கீஸ் எஸ்.எம்.எஸ். சுந்தரராம ஐயர் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார்.
பி.யு.சின்னப்பா அக்காலகட்டத்தில் சூப்பர் ஸ்டாராக விளங்கியவர். குறிப்பாக தமிழ் சினிமா வரலாற்றில் இரட்டை வேடத்தில் நடித்த முதல் நடிகர் பி.யு.சின்னப்பாதான். இந்த நிலையில் பி.யு.சின்னப்பா கதாநாயகியாக நடித்த “ரத்னகுமார்” திரைப்படத்திற்கு அத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான எஸ்.எம்.எஸ். சுந்தரராம ஐயர் ஒரு விமானத்தை வாடகைக்கு எடுத்து, ஆகாயத்தில் தாழ்வாக பறக்கவிட்டு விமானத்தில் இருந்து இத்திரைப்படத்தின் பிட் நோட்டீஸை ஆட்களை வைத்து கீழே போடவைத்திருக்கிறார். இவ்வாறு அக்காலகட்டத்திலேயே இவ்வளவு பிரம்மாண்டமாக இத்திரைப்படத்திற்கு புரொமோஷன் செய்திருக்கிறார். ஆனாலும் இத்திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் தோல்வியை தழுவியிருக்கிறது.
இதையும் படிங்க: வாடிவாசல் வாய்ப்பை தவறவிட்ட கௌதம் மேனன்?… ஃபர்ஸ்ட் பிளான் போட்டது இதுதானா?