இந்தியன் 2 ஷூட்டிங் வர மறுக்கும் கமல் – காரணம் என்ன தெரியுமா ?

Published on: February 26, 2020
---Advertisement---

5b36fc06b8ed43c59b52de9a2869646e

கமல் லண்டனில் நடக்க இருந்த இந்தியன் 2 படப்பிடிப்புக்கு வர மறுப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த வாரம் இந்தியன் 2 படப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக மூன்று பேர் உயிரிழந்தது மிகப்பெரிய அதிர்வுகளை தமிழ் சினிமாவில் உருவாக்கியுள்ளது. இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு வழங்கப்பட்டாலும் இனிமேல் விபத்துகள் நேராது என்பதற்கு என்ன உத்தரவாதம் எனக் கேள்வி எழுந்துள்ளது.

விபத்து நடந்திருக்காவிட்டால் இந்நேரம் ஷங்கர், கமல் நடிக்கும் சில முக்கியக் காட்சிகளை லண்டனில் படமாக்கிக் கொண்டு இருந்திருப்பார். ஆனால் இப்போது தொழிலாளர்கள் உள்பட படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் என்ன விதமான பாதுகாப்பு மற்றும் காப்பீடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என கமல் நீண்ட கடிதம் ஒன்றை லைகாவுக்கு அனுப்பியுள்ளார்.

இவற்றை முழுதாக தெரிந்துகொண்டுதான் அடுத்த கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வேன் என அவர் மறைமுகமாக தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Leave a Comment