Cinema History
நம்பியாருக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த சர்ப்பரைஸ்!.. அட அது சூப்பர் ஹிட் படமாச்சே!…
திரையுலகில் நாடக நடிகராக இருந்து சினிமா நடிகராக மாறிய எம்.ஜி.ஆரை போலவே உருவனவர்தான் நடிகர் நம்பியார். எம்.ஜி.ஆர் சினிமாக்களில் நடிக்க துவங்கிய போதே நம்பியாரும் அவரின் படங்களில் வில்லனாக நடிக்க துவங்கினார். எம்.ஜி.ஆருக்கு அசோகன், ரங்காராவ் என பல வில்லன்கள் இருந்தாலும் நம்பியார்தான் அதிக படங்களில் நடித்தார்.
ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர் படம் எனில் அதில் வில்லன் நம்பியார்தான் என மாறிப்போனது. ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டு பிள்ளை, விவசாயி என பல படங்களில் எம்.ஜி.ஆருக்கு வில்லனாக நம்பியார் கலக்கியிருப்பார். ஆனால், எம்.ஜி.ஆர் இயக்கி நடித்து சூப்பர் ஹிட் அடித்த உலகம் சுற்றும் வாலிபன். இந்த திரைப்படத்தில் நம்பியாரை நடிக்க வைக்கும் எண்ணம் முதலில் எம்.ஜி.ஆருக்கு இல்லை.
பல நாடுகளுக்கும் சென்று இப்படத்தை எடுத்த எம்.ஜி.ஆர். படத்தை முழுவதுமாக முடித்துவிட்டு அதை தனது நண்பரும், நடிகருமான நம்பியாருக்கு போட்டு காட்டியுள்ளார். படத்தை பார்த்து நம்பியார் மிகவும் பாராட்டியுள்ளார். அதன்பின் நம்பியாரிடம் எம்.ஜி.ஆர் ‘இந்த படத்தில் நீங்களும் இருக்கிறீர்கள்’ என சொல்ல, நம்பியாரோ ‘படம் முழுசா எடுத்தாச்சு.. இனிமே எனக்கு என்ன கொடுக்க போறீங்க?’ என கேட்டராம்.
அதன் பின்னர்தான் நம்பியாருடன் மோதுவது போல ஒரு சண்டை காட்சியை படத்தில் அமைத்திருப்பார் எம்.ஜி.ஆர். அந்த சண்டை காட்சியில் ரசிகர்களிடம் விசில் பறந்தது. இந்த படத்தில் அசோகன்தான் வில்லன் என்றாலும் அந்த சண்டை காட்சியில் நடித்து முழுப்பெயரையும் நம்பியார் தட்டிக்கொண்டு போய்விட்டது குறிப்பிடத்தக்கது.