விருது நிகழ்ச்சியில் அவமானப்பட்டு கலங்கி நின்ற நெல்சன்..! – பதறி போய் கிளம்பி வந்த சூப்பர் ஸ்டார்!..

Published on: April 30, 2023
---Advertisement---

முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் பல படங்கள் இயக்கிய பிறகுதான் பெரிய கதாநாயகர்களை வைத்து படம் இயக்க முடியும் என்கிற சூழ்நிலை இருந்தது. ஆனால் இப்போது ஒரு சில படங்கள் ஹிட் கொடுத்தாலே போதும் பெரிய நடிகர்களை வைத்து படம் எடுக்கலாம் என்கிற நிலை வந்து விட்டது.

பெரிய பெரிய நடிகர்களும் கூட இளம் இயக்குனர்களை வைத்து நடிக்கும் படங்கள் பெரும் ஹிட் கொடுப்பதால் இளம் இயக்குனர்களை அதிகம் நம்புகின்றனர். கபாலி படம் ஹிட் கொடுத்த பிறகு நடிகர் ரஜினிகாந்த் கூட இளம் இயக்குனர்களின் இயக்கத்தில் படம் நடிக்க துவங்கிவிட்டார். அதனைத் தொடர்ந்து தற்சமயம் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

நெல்சனுக்கு நடந்த அவமானம்:

நெல்சனுக்கு டாக்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினி படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் அதற்கு நடுவே பீஸ்ட் திரைப்படம் கொடுத்த தோல்வியானது நெல்சனை அதிகமாக பாதித்தது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஒரு விருது வழங்கும் விழாவிற்கு நெல்சனை அழைத்து இருந்தனர். அங்கு அவர் சென்ற பொழுது அவருக்கு மரியாதை குறைவாக சில விஷயங்கள் நிகழ்ந்துள்ளன, அதன் பிறகு நெல்சன் இந்த விஷயத்தை சாதாரணமாக விட்டு விட்டார்.

ஆனால் தாமதமாகவே இந்த விஷயம் ரஜினிகாந்துக்கு தெரிந்துள்ளது. விஷயத்தை கேள்விப்பட்ட ரஜினிகாந்த் நெல்சனை நேரில் வந்து சந்தித்தார். சினிமாவில் ஆரம்ப காலகட்டங்களில் ரஜினிகாந்திற்கு ஏற்பட்ட அவமானங்களை நெல்சனிடம் கூறினார். அனைவருக்குமே சினிமாவில் ஆரம்ப கட்டத்தில் அதிக அவமானங்கள் இருக்கும் ஆனால் அதை நினைத்து தளர்ச்சி அடைய கூடாது என நெல்சனுக்கு அறிவுரை கூறிவிட்டு சென்றுள்ளார் ரஜினிகாந்த்.

Rajkumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.