90’ஸ் கிட்ஸ்கள் கொண்டாடிய விக்ரமன் படத்தின் இரண்டாம் பாகம்… இதுலயும் 5 நிமிஷத்துல கலெக்டர் ஆகிடுவாங்களோ?

Published on: May 1, 2023
Surya Vamsam Part 2
---Advertisement---

90’ஸ் கிட்ஸ்கள் இப்போதும் தொலைக்காட்சிகளில் விரும்பிப்பார்க்கக் கூடிய திரைப்படங்கள் பல உள்ளன. அதில் மிக முக்கியமான திரைப்படமாக “சூர்ய வம்சம்” திரைப்படம் அமைந்துள்ளது.

“சூர்ய வம்சம்” திரைப்படம் 1997 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். இதில் சரத்குமார், தேவயானி, ராதிகா, பிரியா ராமன், மணிவண்ணன் என பலரும் நடித்திருந்தனர். இதில் சரத்குமார் தந்தை-மகன் என இரு வேடங்களில் நடித்திருந்தனர்.

சக்திவேல் கவுண்டர், சின்னராசு ஆகிய இரண்டு வேடங்களிலும் சரத்குமார் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார். இதில் சின்னராசாக வரும் சரத்குமார் பள்ளிப் படிப்பு கூட படிக்காத இளைஞனாக நடித்திருப்பார். அவர் காதலித்து வந்த பிரியா ராமன் ஒரு கட்டத்தில் இவரை அவமானப்படுத்தி வேறு ஒரு தொழிலதிபரை திருமணம் செய்துகொள்வார்.

அந்த நேரத்தில் தேவயானி சரத்குமாரை காதலித்து திருமணம் செய்துகொள்ள, தந்தை சரத்குமாரான சக்திவேல் கவுண்டர் அந்த காதலை ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுவார். மேலும் தேவயானி வீட்டிலும் இவர்களின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துவிடுவார்கள். ஆதலால் தனியாக ஒரு வீடு எடுத்து இருவரும் ஒன்றாக வாழ்ந்துவருவார்கள்.

அப்போது தேவயானி கலெக்டருக்கு படிக்கவேண்டும் என்ற லட்சியம் கொண்டிருப்பார். ஆதலால் சரத்குமார் அவரது படிப்புக்கு உதவி செய்வார். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப்பார்க்குது” பாடலில் சரத்குமார் பல பேருந்துகள் வைத்திருக்கும் முதலாளியாக ஆகிவிடுவார். அதே சமயம் அந்த பாடல் முடிவதற்குள் தேவயானியும் கலெக்டர் ஆகிவிடுவார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட சரத்குமார், தயாரிப்பாளர் சௌத்ரி சூர்ய வம்சம் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை படமாக்குவதற்கான கதை விவாதங்களில் இறங்கியுள்ளதாக ஒரு சூடான தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். மேலும் சரத்குமாரும் ஒரு கதை சொல்லியுள்ளாராம். ஆதலால் விரைவில் ‘சூர்ய வம்சம்” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.