Connect with us
vijayakanth

Cinema History

படம் எடுக்கவே காசு இல்ல! – வீழ்ச்சியில் இருந்த தயாரிப்பாளரை தூக்கிவிட்ட விஜயகாந்த் படம்!..

கோலிவுட் சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு பிறகு திரையுலக ஊழியர்களால் அதிகமாக புகழப்படும் ஒரு மனிதராக இருப்பவர் நடிகர் விஜயகாந்த். விஜயகாந்த் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்த காலக்கட்டத்தில் பலருக்கும் பல நன்மைகளை செய்துள்ளார்.

சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து கடினப்பட்டு கதாநாயகன் ஆனவர் விஜயகாந்த். அதனால் கடைநிலை ஊழியர்கள் கஷ்டம் என்னவென்பது அவருக்கு தெரியும். அதனாலேயே திரை ஊழியர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதலில் வந்து நிற்பார் விஜயகாந்த்.

அதே போல விஜயகாந்த் பெரும் கதாநாயகனாக இருந்தபோது நிறைய இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை வாழ வைத்துள்ளார். பல அறிமுக இயக்குனர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்துள்ளார். இயக்குனர் எஸ்.ஏ சந்திர சேகருக்கு அப்போது அதிக வாய்ப்புகள் கொடுத்து படம் நடித்து கொடுத்தவர் விஜயகாந்த்.

1987 இல் விஜயகாந்த் நடித்து வெளியான திரைப்படம் ஊமை விழிகள். இயக்குனர் அரவிந்த் ராஜ்க்கு இது முதல் படமாகும். கல்லூரியில் படிக்கும்போது அவர் குறும்படமாக எடுத்த திரைப்படம்தான் ஊமை விழிகள். அதை விஜயகாந்தை வைத்து படமாக்கலாம் என திட்டமிடப்பட்டது. விஜயகாந்திற்கும் அந்த கதை மிகவும் பிடித்துவிட்டது.

ஆனால் படத்தின் தயாரிப்பாளர் ஆபாவணன் மிகவும் பண நெருக்கடியில் இருந்தார். அந்த படத்தை இயக்குமளவிற்கு கூட அவரிடம் பணம் இல்லாமல் இருந்தது. இருந்தாலும் படத்தின் கதை மீது இருந்த நம்பிக்கையில் கடனுக்கு பணத்தை வாங்கி ஊமை விழிகள் படத்தை தயாரித்தார்.

அந்த படம் ஓடவில்லை என்றால் அதோடு தயாரிப்பாளர் சினிமாவை விட்டே போக வேண்டும் என்கிற நிலை. ஆனால் படம் எதிர்பார்த்ததை விடவும் அசுர வெற்றியை கொடுத்தது மட்டுமில்லாமல் இப்போது வரை மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தும் ஒரு த்ரில்லர் படமாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: 250 பேருக்கு வீடு கட்ட உதவிய விஜய்சேதுபதி!.. இதெல்லாம் தெரியவே இல்லையே?.. என்ன மனுஷன்யா!..

google news
Continue Reading

More in Cinema History

To Top