பிரபல நகைச்சுவை நடிகர் மனோபாலா திடீர் மரணம் -அதிர்ச்சியில் திரையுலகம்!…

Published on: May 3, 2023
---Advertisement---

தமிழ் சினிமாவில் ஈடு இணையற்ற நகைச்சுவை கலைஞராகவும், அதே சமயம் இயக்குனராகவும் இருந்தவர் நடிகர் மனோபாலா. இன்று அவரது 59 ஆவது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார். தமிழில் இதுவரை 200க்கும் அதிகமான படங்களில் நடித்தவர் மனோபாலா.

தனது ஒல்லியான உடல் அமைப்பையே நகைச்சுவை செய்வதற்கு ஏதுவான விஷயமாக மாற்றி அதை வைத்து மக்களை தொடர்ந்து சிரிக்க வைத்தவர். 1994 இல் தோழர் பாண்டியன் திரைப்படத்தில் துவங்கிய இவரது நடிப்பு பயணம் இப்போது வந்த திரைப்படங்கள் வரை நிற்கவே இல்லை.

இன்னம் 18 படங்களில் நடிப்பதற்காக கமிட் ஆகி இருந்தார் மனோபாலா. நடிகர் என்பதையும் தாண்டி இயக்குனராகவும் தமிழ் சினிமாவிற்கு பல ஹிட் படங்களை கொடுத்தவர் மனோபாலா. 1982 இல் ஆகாய கங்கை என்கிற தனது முதல் படத்தை இயக்கினார். அதனை தொடர்ந்து சிறை பறவை, ஊர் காவலன், மல்லு வேட்டி மைனர் போன்ற பல படங்களை இயக்கியுள்ளார்.

உடல்நலக் கோளாறு:

சிறிது நாட்களுக்கு முன்பு கல்லீரல் பிரச்சனை காரணமாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் மனோபாலா. கடந்த சில நாட்களாக அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சைக்கு பிறகு சில நாட்கள் வீட்டில் ஒய்வெடுக்க வந்திருந்தார் மனோபாலா. இந்த நிலையில் திடீரென உடல்நல கோளாறு காரணமாக இன்று உயிரிழந்தார்.

மனோபாலாவின் திடீர் மரணம் திரையுலக நடிகர்களுக்கும், மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் சிறந்த மற்றொரு நகைச்சுவை நடிகரையும் இழந்துவிட்டோம் என பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Rajkumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.