Connect with us

Cinema News

அஜித்துக்கு கொடுத்த வாக்கை மீறிய ஷாலினி..! நடிகர் பிரசாந்தும் அந்த இயக்குனரும்தான் காரணமாம்…

தமிழ் சினிமாவில் சில சமயங்களில் நட்சத்திரங்களுக்குள் காதல் உருவாகி அது திருமணத்திலும் முடிவதுண்டு. அப்படியாக தமிழ் சினிமாவில் முக்கியமான காதல் ஜோடியாக இருந்து வருபவர்கள் நடிகர் அஜித்தும் அவரது மனைவி ஷாலினியும் ஆவர்.

1999 ஆம் ஆண்டு வெளிவந்த அமர்களம் படத்தில் சேர்ந்து நடித்தப்போது இவர்கள் இருவருக்குமிடையே காதல் ஏற்பட்டது. அந்த படத்தில் நடிப்பதற்கு முன்பே அஜித்தின் பெரும் ரசிகையாக இருந்தார் ஷாலினி. இந்த நிலையில் அஜித்திற்காகவே அமர்களம் படத்தில் நடித்தார் ஷாலினி.

இருவருக்குமிடையே படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருக்கும்போதே காதல் ஏற்பட்டது. ஷாலினிக்காக இயக்குனர் சரண் அஜித்திடம் பரிசு கொண்டு போன சம்பவமெல்லாம் அப்போது நடந்திருந்தது. அஜித், ஷாலினி திருமணத்திற்கு பிறகு ஷாலினி திரைப்படங்களில் நடிப்பதை விட்டுவிட்டார்.

அஜித்திற்கு கொடுத்த வாக்கு:

அதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அஜித்தின் குடும்பத்தார் ஷாலினி நடிப்பதை விரும்பவில்லை என்பதே பெரும்பாலானோர் கூறும் காரணமாக உள்ளது. எனவே அவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன் என அஜித்திற்கு வாக்குறுதி கொடுத்திருந்தார்.

அந்த சமயத்தில் இறுதியாக நடிகர் பிரசாந்துடன் பிரியாத வரம் வேண்டும் என்கிற திரைப்படத்தில் நடித்து வந்தார் ஷாலினி. அந்த படத்தையும் இயக்குனர் சரண்தான் இயக்கினார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே அஜித்திற்கும், ஷாலினிக்கும் திருமணமாகிவிட்டது.

படத்தை கண்டிப்பாக முடித்தாக வேண்டும் என ஷாலினியை அழைத்துக்கொண்டே இருந்தார் சரண். ஆனால் ஷாலினியோ திருமணத்திற்கு பிறகு நடிக்க மாட்டேன் என வாக்குறுதி தந்திருந்தார். ஆனாலும் தனது காதல் கை கூடுவதற்கு காரணமாக இருந்தவர் இயக்குனர் சரண் என்பதால் கொடுத்த சத்தியத்தையும் மீறி அந்த படத்தில் நடித்து கொடுத்தார் ஷாலினி.

Continue Reading

More in Cinema News

To Top