விஜயை வச்சு அப்பவே இத பண்ணிட்டேன்!.. லோகேஷுக்கு ஒரு வேளை குருவா இருப்பாரோ?..

Published on: May 4, 2023
vijay
---Advertisement---

கோலிவுட்டில் ஒரு முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். திரையுலகினருக்கு மிகவும் பிடித்த நடிகராகவும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார் விஜய்.

ஒரு சில நடிகர்களைப் போலவே பல விமர்சனங்களுக்கு உள்ளான விஜய் தனது கடின உழைப்பாலும் முயற்சிகளாலும் இந்த அளவு ஒரு பெரும் உயரத்தை அடைந்திருக்கிறார். இன்று தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் வசூல் மன்னனாகவே திகழ்கிறார் விஜய்.

வேட்டை மன்னன் என்றே அவரை அழைக்க ஆரம்பித்து விட்டனர். அந்த அளவுக்கு அவரின் படங்கள் வெளியாவதற்கு முன்பாகவே பல கோடி தொகைகளுக்கு வசூலாகி விடுகின்றன. இப்பொழுது ஒரு ஆக்சன் மன்னனாக விஜய் திகழ்கிறார் என்றால் அதற்கு முதலில் விதை போட்டவர் இயக்குனர் ஏ.வெங்கடேசன்.

a.venkatesan

வெங்கடேசன் விஜயை வைத்து பகவதி , நிலாவே வா போன்ற படங்களை இயக்கியவர். ஆரம்ப காலங்களில் பெரும்பாலும் குடும்ப பாங்கான கதைகளிலேயே நடித்து வந்த விஜய்யை முதன்முதலில் ஆக்ஷ்ன் பக்கம் திருப்பியவர் வெங்கடேசன் தான்.

இந்த நிலையில் வெங்கடேசன் விஜயை பற்றி ஒரு சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை கூறியிருக்கிறார். அதாவது விஜய்க்கு ஒரு மாபெரும் ஹிட் அடித்த படமான மாஸ்டர் படத்தை லோகேஷ் இயக்கி இருந்தார். அந்த படத்தில் விஜயின் அறிமுக காட்சியான ஒரு காட்சியை பார்த்துவிட்டு வெங்கடேசன் அவருடைய பழைய சம்பவம் ஒன்றை நினைவு படுத்தி இருக்கிறார்.

அந்தப் படத்தில் ஒரு காட்சியில் விஜய் ஓடி வந்து பஸ்ஸில் ஏற முயற்சிப்பார். அதை தியேட்டரில் பார்க்கும்போது ரசிகர்கள் அனைவரும் கைத்தட்டி ஆரவாரத்துடன் கொண்டாடினார்களாம். இதைப்பற்றி குறிப்பிட்டு பேசிய வெங்கடேசன் இந்த காட்சியை நான் ஏற்கனவே நிலாவே வா என்ற படத்தில் வைத்து விட்டேன் என்றும் அதனால் மாஸ்டர் படத்தில் பார்க்கும்போது எனக்கு அப்படி ஒன்றும் பிரமிப்பாக தெரியவில்லைஎன்றும் மேலும் நான் அந்தப் படத்தில் வைத்த காட்சியில் விஜய் அவர்கள் ஓடி வந்து பஸ்ஸின் ஜன்னல் வழியாக ஏறி உள்ளே குதிப்பார் என்றும் அதை அவரிடம் கேட்டேன் பண்ணுவீர்களா என்று கேட்டதற்கு அவர் அதெல்லாம் ஒன்றும் இல்லை தாராளமாக இதை நான் செய்கிறேன் என்று ஓடி வந்து ஜன்னல் வழியாக ஏறி உள்ளே கு என்றும் அந்த பேட்டியில் கூறினார்.

இதையும் படிங்க : கமல்ஹாசனை மனதில் வைத்துக்கொண்டு இயக்குனர் ராம் எழுதிய கதை… ஆனா சோகம் என்னன்னா?…

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.