இனி நேருக்கு நேர் பாக்குறதே கஷ்டம்!.. இசையமைப்பாளர் இமானிடம் சண்டை செய்த சிவகார்த்திகேயன்…

Published on: May 5, 2023
---Advertisement---

தமிழில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் சாதரண தொகுப்பாளராக அறிமுகமாகி தற்சமயம் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

த்ரி, மெரினா மாதிரியான படங்களில் நடித்திருந்தாலும் கூட மனம் கொத்தி பறவை திரைப்படம்தான் சிவகார்த்திகேயனுக்கு கதாநாயகனாக முதல் படமாக அமைந்தது.  அதனை தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

Also Read

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் மார்க்கெட்டை உயர்த்திய படமாக அமைந்தது. தற்சமயம் அவர் நடித்த மாவீரன் மற்றும் அயலான் இரண்டு திரைப்படங்கள் இந்த வருடங்களில் வெளியாக இருக்கின்றன.

அடுத்ததாக கமல் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். ஆனால் பொதுவாக சிவகார்த்திகேயன் திரைப்படம் என்றாலே அதில் அனிரூத் அல்லது இமான்தான் அதிகமாக இசையமைப்பார்கள்.

சிவகார்த்திகேயனுடன் சண்டை:

ஆனால் இந்த படத்தில் அவர்கள் இருவருமே இசையமைக்கவில்லை. இதுக்குறித்து பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறும்போது, அனிரூத் மிகவும் பிஸியாக இருக்கிறார். அடுத்து அவர் கதாநாயகனாக வேறு நடிக்க இருப்பதால் புது படங்களில் கமிட் ஆவதில்லை. அதனால்தான் அவரால் எஸ்.கே திரைப்படத்திற்கு இசையமைக்க முடியவில்லை.

அடுத்ததாக இமான்தான் இந்த படத்திற்கான தேர்வாக இருந்திருக்க வேண்டும். ஆரம்பத்தில் சிவகார்த்திகேயனும், இமானும் நண்பர்களாக இருந்தாலும் இப்போது அவர்கள் இருவருக்கும் இடையே பேச்சு வார்த்தை இல்லை. இமானை நேருக்கு நேராக பார்க்க கூட முடியாத அளவிற்கு அவர்கள் சண்டை போட்டுக்கொண்டனர் என பிஸ்மி தெரிவித்துள்ளார்

இதையும் படிங்க: பட வாய்ப்பு இல்லாமல் கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்த ஹெச்.வினோத்… அந்த இடத்துலதான் ஒரு டிவிஸ்ட்டு!